விடுதலையாக சாட்சிகளை வருண் கலைத்தார்: தெஹல்கா

வியாழக்கிழமை, 16 மே 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,மே.17 - இந்துக்களை தூண்டிவிடும்படி பேசியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் இருந்து விடுதலையாக சாட்சிகள், போலீசார், நீதித்துறை அதிகாரிகளை வருண்காந்தி சரிக்கட்டியதாக தெஹல்கா இதழ் தெரிவித்துள்ளது. கடந்த லோக்சபை தேர்தலின்போது பிலிபித் நகரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது முஸ்லீம்களுக்கு எதிராக இந்துக்களை தூண்டிவிடும்படி வருண்காந்தி பேசியதாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் இருந்து வருண்காந்தி விடுவிடுவிக்கப்பட்டுள்ளார். வழக்கில் இருந்து விடுதலையாக வழக்கை பலவீனப்படுத்த போலீசார், சாட்சிகள், நீதிமன்ற ஊழியர்களை வருண்காந்தி பயன்படுத்தியதாக தெஹல்கா இதழ் நேற்றுமுன்தினம் மாலையில் செய்தி வெளியிட்டுள்ளது. 

இந்த செய்திக்கு வருண்காந்தி மறுப்பு தெரிவித்துள்ளார். தெஹல்கா இதழானது எப்போதும் பாரதிய ஜனதாவுக்கு எதிராக செயல்படுகிறது. உண்மையான பிரச்சினையில் இருந்து திசை திருப்புவதற்காக இந்த தந்திரத்தை தெஹல்கா இதழ் கையாண்டுள்ளது. என்னுடைய பிலிபித் தேர்தல் பிரசார பேச்சு முற்றிலும் திருத்தி கூறப்பட்டுள்ளது. முஸ்லீம்களுக்கு எதிராக இந்துக்களை தூண்டிவிடும்படி நான் எப்போதும் பேசியதில்லை. புதிய தகவல்களின் அடிப்படையில் நான் விடுதலை செய்யப்பட்டுள்ளேன். இது சுயநலம் உள்ளவர்களுக்கு பிடிக்கவில்லை. நான் பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் இந்த தகவல் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது என்று வருண்காந்தி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்: