ஜெயலலிதாவின் 63-வது பிறந்தநாள் - கோயிலில் அன்னதானம்

செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2011      அரசியல்
raj3

 

சென்னை, ஜன.3 - ஜெயலலிதாவின் 63-வது பிறந்தநாளையொட்டி சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் அன்னதானம், விவேசபூஜை நடைபெற்றது.

ஜெயலலிதாவின் 63-வது பிறந்தநாள் வருகிற 24-ந்தேதி வருகிறது. இதையொட்டி, அ.தி.மு.க.வினர் தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகள், அன்னதானம், ரத்ததானம் என சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். 

நேற்று சென்னை மைலாப்பூரிலுள்ள கபாலீஸ்வரர் கோயிலில் தென் சென்னை மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஏ.ஏ.அர்ஜூனன் ஏற்பாட்டில், காலை கோயிலில் விஷேசபூஜை நடத்தப்பட்டது. பின்னர் ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் ஆர்.சின்னசாமி அன்னதானம் வழங்கினார். தென் சென்னை மாவட்ட அ.தி.மு.க செயலாளர் செந்தமிழன் இனிப்பு வழங்கினார். விழாவில் தென் சென்னை மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி நிர்வாகி அபுதீபக், மாணவரணி மாவட்ட செயலாளர் ராமலிங்கம், ஆயிரம் விளக்கு தொழிற்சங்க பேரவை தலைவர் பொன்ராஜா, தி.நகர் கோ.சாமிநாதன், மைலாப்பூர் பகுதி செலயாளர் ஜெயந்திரன், பண்டரிநாதன் மற்றும் ஏராளமான அ.தி.மு.க.வினர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை தென் சென்னை மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஏ.ஏ.அர்ஜூனன் ஏற்பாடு செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: