முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பருவ மழை தீவிரம்: மும்பை வெள்ளத்தில் மிதக்கிறது

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

மும்பை, ஜூன். 12 - தென் மேற்கு பருவ மழையால் மும்பையில் பலத்த மழை பெய்து எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கேரளாவில் தென் மேற்கு பருவ மழை கடந்த 1 ம் தேதி துவங்கியது. அங்கு தற்போது மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதன் தாக்கம் கர்நாடகம், கோவா, மராட்டிய மாநிலங்களுக்கும் பரவியுள்ளது. மும்பையில் பல்வேறு இடங்களில் நேற்றும், நேற்று முன்தினமும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நகரின் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மும்பை நகரமே வெள்ளத்தில் மிதப்பது போல் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் பஸ், ரயில், விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது.  

பலத்த மழை காரணமாக மும்பை மாஹிம் மேற்கு பகுதியில் 35 ஆண்டு பழமைவாய்ந்த 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் 12 பேர் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். போலீசாரும், தீயணைப்பு படையினரும் உடனடியாக சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர் என்றாலும் வயதான ஆண், பெண் உட்பட 5 பேர் இடிபாடுகளில் நசுங்கி பலியானார்கள். அவர்களது உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்