அத்வானியின் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் தேவை

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூன். 12 - மூத்த தலைவர் அத்வானி பா.ஜ.க. தலைமையிடம் கேட்டுள்ள ஒவ்வொரு கேள்விக்கும் பதில் கண்டிப்பாக தேவை என்று மூத்த தலைவரும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஜஸ்வந்த் சிங் கூறியுள்ளார். 

நிதின் கட்காரி, உமா பாரதி உள்ளிட்ட பல்வேறு மூத்த தலைவர்கள் நேற்று அத்வானியை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினர். தனது ராஜினாமா முடிவை அத்வானி வாபஸ் பெற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். அதேபோல மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கும் அத்வானியை சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தனது ராஜினாமா கடிதத்தில் பல்வேறு கேள்விகளை அத்வானி எழுப்பியுள்ளார். அதற்கு பா.ஜ.க. தலைமை அவசியம் பதிலளிக்க வேண்டும் என்றார் ஜஸ்வந்த் சிங். அத்வானியைப் போலவே ஜஸ்வந்த் சிங்கும் கோவா கூட்டத்திற்குப் போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: