ராகுல் காந்தி இன்று அமேதி செல்கிறார்

புதன்கிழமை, 12 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

அமேதி, ஜூன்.13  - காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி இன்று அமேதி தொகுதிக்கு செல்கிறார். அவரது தொகுதியான அமேதியில் அவர் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்துவார் என்று செய்திகள் தெரிவித்தன.

அவரது ஒரு நாள் சுற்றுப்பயணத்தில் ஜக்தீஷ்பூரில் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இதில் ராகுல் காந்தி பேசுகிறார். கவுரிகனி என்ற இடத்தில் நடக்கும் சேவாதள கூட்டத்தில் தொண்டர்களிடம் அவர் ஆலோசனை நடத்துவார். சுகுல் பஜார் பகுதியில் ஒரு தபால் நிலையத்தை அவர் துவக்கி வைக்கிறார். ஜெஸ் என்ற இடத்தில் நடைபெறும் ராஜீவ்காந்தி மகிளா விகாஷ் அமைப்பினரிடமும் அவர் பேசுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: