முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பால் வரைவு நகல் ஜூன் 30ல் இறுதியாகும்

புதன்கிழமை, 4 மே 2011      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி,மே.4 - ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் 30 ம் தேதிக்குள் புதிய லோக்பால் சட்ட மசோதா வரைவு நகல் இறுதி செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் கபில்சிபல் தெரிவித்துள்ளார். ஊழலுக்கு எதிராக வலுவான சட்டத்தை தயாரிப்பதற்காக மத்திய அரசின் சார்பாக அமைக்கப்பட்ட குழுவின் 2 வது கட்ட கூட்டம் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அலுவலகத்தில் நடந்தது. இதில் அண்ணா ஹஸாரே குழுவினர் சார்பில் 2 முக்கிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கபில்சிபல் கூறும் போது, 

ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் மாதம் 30 ம் தேதிக்குள் புதிய லோக்பால் மசோதா வரைவு நகல் இறுதி செய்யப்படும் என்றார். அமைச்சரின் கருத்தை சமூல நல அமைப்புகளின் பிரதிநிதிகளான பிராசந்த் பூஷன், அரவிந்த் கேஜரிவால் ஆகியோரும் குறிப்பிட்டனர். இக்குழுவின் கூட்டம் மீண்டும் வரும் 7, 23 மற்றும் 30 ம் தேதிகளில் கூடி லோக்பால் மசோதாவில் இடம் பெற வேண்டிய விவரங்களை முடிவு செய்ய இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்