முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதி 3 நாள் சுற்றுப்பயணம்

திங்கட்கிழமை, 1 ஜூலை 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.2 - தி.மு.க. தலைவரும், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான கருணாநிதி 3 நாள் சுற்றுப்பயணமாக திருவாரூர்-நாகைக்கு செல்கிறார். திருவாரூர் தெற்கு வீதியில் ஜூலை - 6 ம் தேதி மாவட்ட திமுக சார்பில், திமுக தலைவர் மு. கருணாநிதியின் 90-வது பிறந்த நாள் பொது கூட்டம் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் பங்கேற்பதற்காக திமுக தலைவர் மு. கருணாநிதி ஜூலை 5-ம் தேதி சென்னையிலிருந்து இரவு 11.15 மணிக்குப் புறப்படும் கம்பன் விரைவு ரயிலில் செல்கிறார்.

ரயில் அதிகாலை 5.30 மணிக்கு திருவாரூர் ரயில் நிலையத்துக்கு வருகிறது. இதில் வரும் கருணாநிதிக்கு மாவட்ட திமுக சார்பில் திராளான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் கருணாநிதி திருவாரூர் சன்னதி தெருவிலுள்ள அவரது சகோதரி வீட்டில் ஓய் வு எடுக்கிறார். அடுத்து காட்டூரில் உள்ள தனது தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்துவார் என்று கூறப்படுகிறது.

பின்னர் மாலை 6 மணி அளவில் தெற்கு வீதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று விட்டு அன்று இரவே திரும்புகிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony