முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோர்டில் ஆஜரானார் விஜயகாந்த்: தே.மு.தி.க.வினர் ரகளை

திங்கட்கிழமை, 1 ஜூலை 2013      தமிழகம்
Image Unavailable

 

நாகர்கோவில், ஜூலை. 1 - முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய வழக்கில் ஆஜராக நாகர்கோவில் கோர்ட்டுக்கு நேற்று பகல் 11.30 மணிக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வந்தார். அவரை பார்க்கவும், வழக்கில் ஆஜராகவும், தே.மு.தி.க. தொண்டர்களும், வக்கீல்களும் கோர்ட்டு முன்பு கூடி நின்றனர். விஜயகாந்த் கோர்ட்டுக்குள் நுழைந்ததும், தே.மு.தி.க. வக்கீல்களும், தொண்டர்களும் அவரை பின் தொடர்ந்து கோர்ட்டுக்குள் சென்றனர். 

சிலர் கோர்ட்டு வளாகத்தில் விஜயகாந்தை வாழ்த்தி கோஷம் எழுப்பினர். இதற்கு கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்த வக்கீல்களும், அரசு வக்கீல் ஞானசேகரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கோர்ட்டுக்குள் கோஷமிடுவோரை கோர்ட்டு வளாகத்திலிருந்து அப்புறப்படுத்தும் படி நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர். 

இதையடுத்து கோர்ட்டு அறையில் இருந்து வழக்கு விசாரணைக்கு வந்தவர்களை தவிர மற்றவர்கள் வெளி யேற்றப்பட்டனர். அப்போது தே.மு.தி.க. வக்கீல்களுக்கும், கோர்ட்டில் இருந்த மற்ற வக்கீல்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு மூண்டது. இதில், சிலர் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்தனர். 10-க்கும் மேற்பட்ட வக்கீல்களுக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். நிலைமை விபரீதமானதை தொடர்ந்து கோர்ட்டு முன்பு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தகராறில் ்டுபட்டவர்களை விரட்டி அடித்தனர். இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. 

இந்த சம்பவம் பற்றி அ.தி.மு.க. வக்கீல் ஞானசேகர் கோட்டார் போலீசில் ஒரு புகார் கொடுத்தார்.அதில், கூறி இருப்பதாவது:- 

முதல்-அமைச்சரை அவதூறாக பேசிய வழக்கில் நாகர்கோவில் கோர்ட்டுக்கு இன்று ஆஜராக வந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மற்றும் அவருடன் வந்த கட்சி நிர்வாகிகள் கோர்ட்டில் இருந்த என்னை தாக்கி தகாத வார்த்தைகள் பேசினர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வக்கீல்கள் போர்வையில் வக்கீல் அல்லாதவர்களும் கோர்ட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடவடிக்கையில் ்டுபட்டனர். அவர்களையும் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி இருந்தார். 

பின்னர் வக்கீல் ஞானசேகர் நிருபர்களிடம் கூறியதாவது:- 

நாகர்கோவில் கோர்ட்டில் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் சார்பில் ஆஜரான வக்கீல்கள் விஜயகாந்த் வந்து கொண்டிருப்பதாகவும், வழக்கை சிறிது நேரம் ஒத்திவைக்கும்படியும் கேட்டுக்கொண்டனர். நீதிபதியும் அதை ஏற்று சிறிது நேரம் வழக்கை தள்ளி வைத்தார்.

அடுத்து ஒரு கொலை வழக்கு மீதான விசாரணை நடந்தது. நான் அந்த வழக்கில் ஆஜராகி சாட்சிகளிடம் விசாரித்து கொண்டு இருந்தேன். பகல் 11.30 மணிக்கு கோர்ட்டு அறைக்கு வெளியே பயங்கர சத்தம் கேட்டது. என்னவென்று விசாரிப்பதற்குள் கோர்ட்டு அறைக்குள் வக்கீல்கள் நுழையும் பாதை வழியாக விஜயகாந்த்தும், அவருடன் வந்தவர்களும் நுழைந்து விட்டனர். விஜயகாந்த் சாட்சி கூண்டில் ஏறாமல் என் அருகே வந்து நின்றார். இதுபற்றி நான் நீதிபதியிடம் முறையிட்டேன். விசாரணைக்கு தேவை இல்லாதவர்களை அறையில் இருந்து வெளியேற்றும்படியும் கூறினேன். இதை கேட்டதும் விஜயகாந்த் என்னை முறைத்தார். அவருடன் இருந்த வக்கீல்கள் என்னை அடிக்க பாய்ந்தனர். சிலர் தாக்கவும் செய்தனர். 

நீதிபதி முன்னிலையில் நடந்த இந்த தாக்குதலில் எனது மூக்கு கண்ணாடி உடைந்தது. அருகில் இருந்த மற்ற வக்கீல்கள் என்னை பாதுகாத்தனர். விஜயகாந்த் மற்றும் அவருடன் வந்தவர்களால் தாக்கப்பட்டது பற்றி போலீசில் நான் புகார் செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். 

கோர்ட்டில் அரசு வக்கீல் ஞானசேகர் தாக்கப்பட்டதற்கு நாகர்கோவில் வக்கீல் சங்க நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையே அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் சிவசெல்வராஜன், ஜான் தங்கம் மற்றும் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், பால்வளத்துறை தலைவர் அசோகன் உள்பட பல்வேறு அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள் விரைந்து வந்தனர். அவர்கள் ஞானசேகருக்கு ஆறுதல் கூறியதோடு சம்பவம் பற்றியும் கேட்டறிந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி. உதயகுமார் தலைமையில் போலீசார் கோர்ட்டை சுற்றி பாதுகாப்பு பணியில் ்டுபட்டனர். தாக்கப்பட்ட அரசு வக்கீல் ஞானசேகர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony