லிபியாவில் கலவரம் உள்நாட்டு போராக மாறியுள்ளது

செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2011      உலகம்
Libya Clash

 

டிரிபோலி, பிப்.23 - லிபியாவில்  அதிபருக்கு எதிராக கலவரம் உள்நாட்டு போராக உருவெடுத்துள்ளது.லிபியாவின் அதிபர் கடாபி 42 ஆண்டு காலமாக ஆட்சி செய்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு எதிராக போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் டிரிபோலி, பென்காசி உள்ளிட்ட நகரங்களிலும் கலவரம் பரவியுள்ளது. போராட்டத்தை அடக்க கடாபி அரசு ராணுவத்தை ஏவியுள்ளது. பென்காசி நகரில் போராட்டத்தில் ஈடுபட்டு இறந்தவர்களின் இறுதி ஊர்வலம் நடந்தது. அவர்கள் மீது கடாபியின் ராணுவம்  ஹெலிகாப்டரில் பறந்தபடி துப்பாக்கி சூடு நடத்தியது அதிலும் பலர் உயிரிழந்தனர்.இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அரசு அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தினர். அல்பயடோ நகரில் கவுன்சில் அலுவலகத்திற்கு தீ வைக்கப்பட்டது. இதனால் போராட்டம் வலுவடைந்து உள்நாட்டு போராக மாறியுள்ளது. இதையே திபர் கடாபியின் மகன் இஸ்லாம் கடாபி டெலிவிஷனில் பேசியபோது குறிப்பிட்டிருந்தார். மதவாதிகள் தான் இந்த போரட்டத்திற்கு பின்னணியில் இருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இதனிடையே ஐ.நா. சபையின் பொது செயலாளர் பான்கி மூன் பொதுமக்களை ராணுவம் கொண்டு துப்பாக்கி சூடு நடத்தியதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற தாக்குதல்கள் மனித உரிமைக்கு எதிரானது என்றும் அவர் குறிப்பிடிடுள்ளார். மேலும் அவர் லிபியாவில் நடக்கும் வன்கொடுமை சம்பவங்களை உலக நாடுகள் இணைந்து எதிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். லிபியாவில் தற்போது ஏற்பட்டுள்ள கலவரத்தில் இதுவரை 400 க்கும் மேற்பட்டவர்கள் இறந்ததாக மனித உரிமை கமிஷன் தெரிவித்துள்ளது.

Johnny Movie Review | Top Star Prashanth | Sanchita Shetty | Vetriselvan | Thiagarajan

Thuppakki Munai Review | Vikram Prabhu | Hansika | Movie Review | Thinaboomi

ஆன்மிகம் என்றால் என்ன | Aanmeegem | Brahma Kumaris Tamil | Arivom AanmeegamTamil

Learn colors with 10 Color Play doh and Bumblebee | Learn numbers with Clay and balloons and #TMNT

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்: