எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஜூலை.7 - ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தமிழகத்தில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவ மழை தமிழகத்திற்கு கை கொடுக்காது என்றாலும், இந்த ஆண்டு ஒரு சில மாவட்டங்களில் இயல்பை விட அதிக மழை பெய்துள்ளது. நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மண்டலங்களில் நல்ல மழை பெய்துள்ளது.
சென்னையில் சராசரி மழை அளவை விட குறைவாகவே பதிவாகி உள்ளது. ஜூன் 1 முதல் ஜூலை 3-ந் தேதி வரை ஒரு மாதத்தில் சென்னையில் 40 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
ஆனால் இந்த காலத்தில் சராசரி மழை அளவு 74.2 மில்லி மீட்டர் பெய்ய வேண்டும். சென்னையை பொறுத்தவரை மழையின் அளவு மிகவும் பற்றாக்குறையாகும்.
ஆனாலும் சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளுார் மாவட்டங்களில் சென்னையை விட அதிக மழை பதிவாகி உள்ளது.
திருவள்ளுார் மாவட்டத்தில் சராசரி மழை அளவு 80.5 மில்லி மீட்டரை விட கூடுதலாக 93.3 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
இதே போல காஞ்சீபுரம் மாவட்டத்திலும் இயல்பை விட மழை அதிகம் பதிவாகி உள்ளது. அங்கு 80.7 மில்லி மீட்டர் தென்மேற்கு பருவ மழை கிடைத்துள்ளது. சராசரி அளவு 77.5 மில்லி மீட்டராகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
சென்னையில் வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களை விட ஆகஸ்டு, செப்டம்பரில் தான் அதிக மழை பெய்யும். எனவே வருகிற வாரங்களில் அதிக மழையை எதிர்பார்க்கலாம் என்று வானிலை மைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |