முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதத்தை தடுப்பது குறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி

திங்கட்கிழமை, 8 ஜூலை 2013      உலகம்
Image Unavailable

 

புதுடெல்லி,  ஜூலை.9 - தீவிரவாதத்தை தடுப்பது குறித்து 39 இந்திய அதிகாரிகளுக்கு அமெரிக்காவில்  பயிற்சி அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக இந்கியாவும், அமெரிக்காவும் கூட்டாகச் செயல்பட்டு வருகின்றன. அமெரிக்காவில் வடக்கு கரோலினா பகுதியில் உள்ள மோயக் பகுதியில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கை பற்றி இந்திய போலீஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி  அளிக்கப்பட்டது.

தீவிரவாத தடுப்பு முறைகள் என்ற தலைப்பில்  நடைபெற்ற பயிற்சி முகாமில்  என்.ஐ.ஏ.யைச் சேர்ந்த சஞ்சய் தால், தேசிய பாதுகாப்புப் படை கமாண்டர் ரவீந்திரசிங், ஐதராபாத்தை சேர்ந்த டி.எஸ்.பி.தேவேந்தர்சிங், தமிழ்நாட்டைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் சேகரன் உள்பட 15 போலீஸ் அதிகாரிகள்  பயிற்சி பெற்றுள்ளனர். குண்டு வெடிப்புக்கு பிந்தைய விசாரணை என்ற தலைப்பில் நடைபெற்ற பயிற்சி முகாமில் பாராளுமன்ற மூத்த பாதுகாப்பு அதிகாரி ரவீந்தர்குமார், தேசிய புலனாய்வுப் பிரிவு டி.எஸ்.பி. வெங்கடராமண்ணா, என்.எஸ்.ஜி. டீம் கமாண்டர் ரிஷி சர்மா தீவிரவாத எதிர்ப்புப் படை இன்ஸ்பெக்டர் பஜ்ரங் வாசுதேவ், மதுரை சிறப்பு புலனாய்வுப் பிரிவு டி.எஸ்.பி. கார்த்திகேயன் உள்பட 24 போலீஸ் அதிகாரிகள் பயிற்சி பெற்றனர். இவர்களுக்கு அமெரிக்காவை சேர்ந்த எஸ்.பி.ஐ. அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் மற்றும் போலீஸார் பயிற்சி அளித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்