முக்கிய செய்திகள்

டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயருகிறது

Diesel-Fuel-India-Prices

புதுடெல்லி,மே.5 - டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்படுகிறது. பெட்ரோல் விலையையும் லிட்டருக்கு ரூ.3 முதல் 4 வரை உயர்த்த எண்ணெய் கம்பெனிகள் பரிசீலனை செய்து வருகின்றன. இந்தியாவின் எண்ணெய் தேவைக்கு அளவுக்கு உள்நாட்டில் உற்பத்தி இல்லை. அதனால் அரபு நாடுகள் மற்றும் சர்வதேச சந்தைகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு உள்நாட்டில் சுத்தகரிக்கப்பட்டு ஆயில் கம்பெனிகள் மூலம் விநியோகிக்கப்படுகிறது. இதனால் இறக்குமதி செலவு மற்றும் சுத்தகரிப்பு செலவு என்று ஏற்படுகிறது. மேலும் சர்வதேச சந்தையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 45 அமெரிக்க டாலராக இருந்தது. இது தற்போது 100 டாலராக அதிகரித்துவிட்டது. இதனால் உள்நாட்டில் பெட்ரோல்,டீசல் மான்ய விலையில் விநியோகம் செய்வதால் ஒரு நாளைக்கு ரூ. 500 கோடி வீதம் நஷ்டம் ஏற்படுகிறது. இதை குறைக்கும் வகையில் தற்போது டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 3 உயர்தத முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. தற்போது தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் டீசல் விலையை உயர்த்துவது குறித்து தேர்தல் கமிஷனுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. ஆலோசனையின்போது டீசல் விலையை உயர்த்த தேர்தல் கமிஷன் சம்மதித்துள்ளது. மேலும் தேர்தல் முடிவு அறிவிக்கப்படுவதற்கு முன்பு மத்திய கேபினட் அமைச்சரவை கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற உள்ளது. அப்போது டீசல் விலை உயர்த்தப்படுவதற்கு அனுமதி அளிக்கப்படலாம் என்று தெரிகிறது. பெட்ரோல் விலையையும் ஒரு லிட்டருக்கு ரூ.3 முதல் 4 வரை உயர்த்தவும் கியாஸ் விலையையும் உயர்த்தவும் ஆயில் கம்பெனிகள் பரிசீலனை செய்து வருகின்றன. கடைசியாக கடந்த ஜனவரி மாதம் பெட்ரோல்,டீசல் விலை உயர்த்தப்பட்டது. தற்போது சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 61.48 பைசாவும் ஒரு லிட்டர் டீசல் ரூ.40.11 பைசாவாகவும் இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: