உ.பி.யில் குழந்தை பலி: ரிக்ஷாக்காரர் ஊசி போட்டாராம்!

புதன்கிழமை, 17 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

லக்னோ, ஜூலை. 18 - உத்தர பிரதேசத்தில் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த 7 மாத குழந்தைக்கு ரிக்ஷாக்காரர் ஒருவர் ஊசி போட்ட பிறகு அது பரிதாபமாக இறந்தது. உத்தர பிரதேச மாநிலம் பாலியா மாவட்ட மருத்துவமனையில் 7 மாத ஆண் குழந்தை ஒன்று அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்த மருத்துவமனையில் ரிக்ஷாக்காரர் ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு ஊசி போடுவது, தையல் போடுவது மற்றும் மருந்து கொடுப்பது போன்ற பணிகளை செய்து வந்துள்ளார். அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த 7 மாத ஆண் குழந்தைக்கு நேற்று காலை ஊசி போட்டுள்ளார். 

இதையடுத்து குழந்தை இறந்துவிட்டது. உடனே குழந்தையின் உறவினர்கள் இது குறித்து போலீசில் புகார் கொடுத்தனர். இந்த விவகாரம் குறித்து விசாரித்து வருவதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட் கே.பி. சிங் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆண்டு இதே மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த நோயாளிகளுக்கு துப்புரவுத் தொழிலாளி ஒருவர் சிகிச்சை அளித்து சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: