முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சகாரா நிறுவன தலைவருக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

வியாழக்கிழமை, 18 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை. 19 - முதலீட்டாளர்களுக்கு பணத்தை உடனடியாக திருப்பி கொடுக்கா விட்டால் சகாரா குரூப் நிறுவனத் தலைவர் சுபத்ரா ராய் நேரில் ஆஜராகவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கடுமையாக எச்சரித்துள்ளது.

சகாரா குழுமத்தைச் சேர்ந்த சகாரா இந்தியா ரியல் எஸ்டேட் கார்ப்பரேஷன், சகாரா ஹவுசிங் இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் விதிமுறைகளை பின்பற்றாமல் கடன் பத்திரங்கள் மூலம் திரட்டிய 24,000 கோடியை முதலீட்டாளர்களுக்கு திரும்ப வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கடந்த ஆண்டு மார்ச் 31 ல் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, சகாரா நிறுவனம் அப்பீல் செய்தது. அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட் டிசம்பரில் அளித்த உத்தரவில், செபியிடம் சகாரா நிறுவனம் முதல் தவணையாக 5,120 கோடியும், மீதியை பிப்ரவரிக்குள் செலுத்தமாறு உத்தரவிட்டது. அதையும் சகாரா பின்பற்றவில்லை. இதனால், சகாரா நிறுவன சொத்துக்களை முடக்க செபி நடவடிக்கை எடுத்தது.

இந்நிலையில், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், ஜெ.எஸ். கேகார் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படாத சகாரா நிறுவனத்துக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆகஸ்ட் 31 ம் தேதிக்குள் முழு தொகையையும் முதலீட்டாளர்களுக்கு திருப்பி செலுத்த வேண்டும். தவறினால், நீதிமன்ற அவமதிப்புக்காக நிறுவன தலைவர் சுப்ரதா ராய் நேரில் ஆஜராக உத்தரவிடப்படும் என எச்சரித்தனர். இதன் பின், வழக்கு விசாரணையை வரும் 24 ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago