முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது டெஸ்ட்: இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 361 ரன்

வெள்ளிக்கிழமை, 19 ஜூலை 2013      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஜூலை. 20 - ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்து வரும் ஆஷஸ் தொடர் 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 361 ரன்னில்ஆட்டம் இழந்தது. இங்கிலாந்து அணி தரப்பில், இயான் பெல் சதம் அடித்தது ஆட்டத்தின் சிறப்ப ம்சமாகும். தவிர, டிராட் , பேர்ஸ் டோ, பிராட் மற்றும் ஸ்வான் ஆகி யோர் அவருக்குப் பக்கபலமாக ஆடினர். 

ஆஸ்திரேலிய அணி சார்பில், ஹாரிஸ் மற்றும் ஸ்மித் இருவரும் சிறப்பாக பந்து வீசி 8 முக்கிய விக்கெட்டைக் கைப் பற்றினர்.அவர்களுக்கு ஆதரவாக வாட்சன் மற்றும் பட்டின்சன் இருவரும் பந் து வீசினர். 

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடர் 2-வது டெஸ்ட் போட்டி லண்ட னில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வரு கிறது. 

இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 100.1 ஓவரி ல் அனைத்து விக்கெட்டையும் இழந்து 361 ரன்னை எடுத்தது. அந்த அணி சார் பில் ஒரு வீரர் சதமும், 2 வீரர்கள் அரை சதமும் அடித்தனர். 

இங்கிலாந்து அணி தரப்பில் இயான் பெல் அதிகபட்சமாக, 211 பந்தில் 109 ரன் னை எடுத்தார். இதில் 16 பவுண்டரி அடக்கம். இறுதியில் அவர், ஸ்மித் வீசி ய பந்தில் கிளார்க்கிடம் கேட்ச் கொடு த்து வெளியேறினார். 

டிராட் 87 பந்தில் 58 ரன் எடுத்தார். இதி ல் 11 பவுண்டரி அடக்கம். இறுதியில் அவர் ஹாரிஸ் வீசிய பந்தில் கவாஜா விடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். 

பேர்ஸ்டோ 146 பந்தில் 67 ரன் எடுத்தா ர். இதில் 7 பவுண்டரி அடக்கம்.  இறுதி யில் அவரும் ஸ்மித் வீசிய பந்தில் அவ ரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறி னார். தவிர, பிராட் 33 ரன்னையும், ஸ்வான் 28 ரன்னையும் எடுத்தனர். 

இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 28 ரன்னிற்கு 3 விக்கெட்டை இழந்து தடு மாறிக் கொண்டு இருந்தது. அப்போது டிராட் , பெல் மற்றும் பேர்ஸ்டோ ஆகியோர் இணைந்து ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். 

டிராட்டும், பெல்லும் இணைந்து 4-வது விக்கெட்டிற்கு 99 ரன் சேர்த்தனர். பெ ல்லும், பேர்ஸ்டோவும் இணைந்து 5- வது விக்கெட்டிற்கு 144 ரன் சேர்த்தனர். 

ஆஸ்திரேலிய அணி சார்பில், ஹாரிஸ் அபாரமாக பந்து வீசி 72 ரன்னைக் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். ஸ்மித் 18 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். தவிர, பட்டின்சன், மற்றும் வாட்சன் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

இங்கிலாந்து அணி முதல் நாளன்று முதல் இன்னிங்சில் 89 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்னை எடுத்து இருந்தது. நேற்று தொடர்ந்து ஆடிய அந்த அணி 361 ரன்னில் ஆட்டம் இழந் தது. 

பின்பு முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ் திரேலிய அணி 2- வது நாள் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு  28.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 82 ரன் னை எடுத்து இருந்தது. 

ஆஸி. அணி தரப்பில் கேப்டன் கிளார்க் 20 ரன்னுடனும், ஸ்மித் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். முன்னதாக வாட்சன் 30 ரன்னிலும், ரோஜர்ஸ் 15 ரன்னி லும், கவாஜா 14 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இங்கி. அணி சார்பில் பிரஸ் னன் 2 விக்கெட்டும், ஸ்வான் 2 விக்கெ ட்டும் எடுத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்