மே.இ.தீவு - பாக்., மோதிய 3-வது ஒரு நாள் போட்டி டிரா

சனிக்கிழமை, 20 ஜூலை 2013      விளையாட்டு
Image Unavailable

 

கிராஸ் இஸ்லெட், ஜூலை. 21 - மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் பாகி ஸ்தான் அணிகளுக்கு இடையே கிராஸ் இஸ்லெட் நகரில் நடந்த 3-வது ஒரு நா ள் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது. பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் உமர் அக் மல் கடைசி கட்டத்தில் ரன் அவுட் வா  ய்ப்பை தவறவிட்டார். மே.இ.தீவின் கடைசி விக்கெட் ஜோடியான கெமர் ரோச் மற்றும் ஜேசன் ஹோல்டர் இணை கடைசி பந்தில் 3 ரன் எடுக்க தவறியது. இதனால் இந்தப் போட்டி டிராவானது. 

மே.இ.தீவு மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3-வது ஒரு நா ள் போட்டி செயின்ட் லூசியா தீவில் உள்ள கிராஸ் இஸ்லெட் நகரில் நடந் தது. 

இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்க ப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற் கு 229 ரன்னை எடுத்து இருந்தது. 

230 ரன்னை எடுத்தால் வெற்றி பெற லாம் என்ற இலக்குடன் களம் இறங்கி ய மே.இ. தீவு அணிக்கு கடைசி ஓவரி ல் வெற்றி பெற 15 ரன் தேவைப் பட்டது. 

பாக். அணியின் மிதவேகப் பந்து வீச் சாளரான வகாப் ரியாஸ் பந்தில் ஹோல்டர் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சரை அடித்தார். 

இதனால் மே.இ.தீவு அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமானது. கடைசி பந்து ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. இறுதியில் இந்த ஆட்டம் சமனா  னது. 

பாகிஸ்தான் மற்றும் மே.இ.தீவு அணிகளுக்கு இடையேயான 4 - வது ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக் கிழமை) நடக்கிறது. 

பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியி ல் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா மற் றும் மே.இ.தீவு வீரர் சிம்மன்ஸ் இருவ ரும் தலா 75 ரன்னை எடுத்தனர். இதனால் ஆட்ட நாயகன் விருது இருவ ருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. 

மே.இ.தீவு அணி 49 -வது ஓவரில் 9 விக் கெட் இழப்பிற்கு 205 ரன் என்ற நிலை யில் இருந்தது. இருந்த போதிலும், பாக். அணி இதில் வெற்றி பெறாதது கேப்டன் மிஸ்பாவிற்கு ஏமாற்றத்தை அளித்தது. 

இது குறித்து மிஸ்பாவிடம் கேட்ட போது, இந்தப் போட்டியில் நாங்கள் வெற்றி பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது. 

ஆனால் கடைசி கட்டத்தில் ஹோல்டர் சிறப்பாக ஆடினார். இதனால் ஆட்டத் தின் போக்கு மாறியது என்று அவர் வருத்தத்துடன் தெரிவித்தார். 

மேலும், கடைசி ஓவரில் எங்களது பந் து வீச்சாளர் மோசமாக வீசினார். மே. இ. தீவு அணியின் பின் வரிசை வீரர்கள் சிறப்பாக ஆடினார்கள். அவர்களுக்கு எங்களது வாழ்த்துகள் என்றார் அவர். 

பாகிஸ்தான் அணி முன்னதாக குறைந் த ஸ்கோரில் துவக்க வீரர்களை இழந்த து. பின்பு கேப்டன் மிஸ்பா பொறு ப்பு டன் ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டார். 

பின்பு உமர் அக்மல் 31 பந்தில் 40 ரன் னை எடுத்து அணியின் முன்னிலைக்கு உதவினார். அக்மல் 7-வது விக்கெட்டி ற்கு வகாப்புடன் (19 ரன்) இணைந்து 26 பந்தில் 52 ரன்னைச் சேர்த்தது குறிப்பிட த்தக்கது. 

இதனால் இந்தப் போட்டியில் பாகிஸ் தான் அணி சவாலான ஸ்கோரை எட்டியது. கயானாவில் முதல் 2 போட்டி நடந்தது. முதல் 2 ஆட்டத்தை விட இந்த ஆட்டத்தில் பந்துகள் வேகமாகவு ம், எகிறிக் குதிக்கும் வகையிலும் இருந்தன. 

மே.இ.தீவு அணி சார்பில் ஹோல்டர் மற்றும் டிவைன் பிராவோ இருவரும் தலா 2 விக்கெட் எடுத்தனர். 

கடைசி கட்ட ஓவர்களை தானே வீச வேண்டும் என்று கேப்டன் பிராவோ விரும்பினார். ஆனால் இந்த முடிவு மோசமான விளைவை ஏற்படுத்தியது. 

பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் கடைசி கட்டத்தில் மே.இ.தீவு பந்து வீச்சை விளாசித் தள்ளினர். முக்கியமாக பிரா வோவின் கடைசி 3 ஓவரில் அவர்கள் 40 ரன் எடுத்தனர். 

மர்லான் சாமுவேல்சை இந்தப் போட்டியில் சரியாக பயன்படுத்தாதது நல்ல முடிவல்ல. அவர் முன்னதாக 3 ஓவர்க ளை வீசி 4 ரன்னை கொடுத்து இருந் தார். இறுதிக் கட்டத்தில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. 

இந்தப் போட்டி குறித்து மே.இ.தீவு கேப்டன் பிராவோவிடம் கேட்ட போது, கடைசி கட்டத்தில் பின்வரிசை வீரர்கள் நன்றாக ஆடினார்கள். இருந்த போதிலும் வெற்றி பெற முடியாதது வருத்தம் அளிக்கிறது என்றார் அவர். 

முன்னதாக பாக். அணியின் வேகப் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி மே.இ.தீவு அணியின் முன்வரிசை வீரர் கள் 3 பேரை அவுட்டாக்கினர். பின்பு சிம்மன்ஸ் மற்றும் சாமுவேல்ஸ் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். 

பாக். அணி சார்பில் சயீத் அஜ்மல் 3 விக்கெட்டை வீழ்த்தினார். ஜூனைத் கான் 2 விக்கெட் எடுத்தார். இதனால் மே.இ. தீவு அணி ஒரு கட்டத்தில் 27 ரன்னில் 5 விக்கெட்டை இழந்து தடு மாறிக் கொண்டு இருந்தது. 

மே.இ.தீவு அணி கடைசி ஓவரில் கடை சி பந்தில் 3 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையிலும், 2 ரன் னை எடுத்தால் டிரா என்ற நிலையிலும் இருந்தது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: