லல்லு மீதான நிலை குறித்து தெரிவிக்க சி.பி.ஐ.க்கு கெடு

செவ்வாய்க்கிழமை, 23 ஜூலை 2013      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூலை,24 - கால்நடை தீவன வழக்கு விசாரணையை வேறு கோர்ட்டுக்கு மாற்றக்கோரி லல்லு பிரசாத் யாதவ் தாக்கல் செய்துள்ள மனு மீது சி.பி.ஐ. தனது நிலையை ஒருவார காலத்திற்குள் தெரிவிக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு கெடுவிதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 

பீகார் மாநில முதல்வராக ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி தலைவர் லல்லு பிரசாத் மீது கால்நடை தீவன ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இதனையொட்டி அவர் முதல்வர் பதவியில் இருந்து விலகினார். இதுதொடர்பான வழக்கு விசாரணை டெல்லி விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையை வேறொரு விசாரணை கோர்ட்டுக்கு மாற்றக்கோரி சுப்ரீம்கோர்ட்டில் லல்லு பிரசாத் யாதவ் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி சதாசிவம் மற்றும் நீதிபதி ரஞ்சன் கோபால் ஆகியோர் கொண்ட பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு மீது சி.பி.ஐ. எந்த கருத்தும் தெரிவிக்காததால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டங்தாக நீதிபதிகள் தெரிவித்தனர். முன்னதாக லல்லு பிரசாத் யாதவ் சார்பாக ஆஜரான பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி வாதாடுகையில் விசாரணையை வேறு விசாரணை கோர்ட்டுக்கு மாற்றக்கோரும் மனு தொடர்பாக ஒரு வார காலத்திற்குள் மேலும் துணை பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ஒருவார காலம் அவகாசம் கோரினார். அப்போது நீதிபதி ரஞ்சன் கோகாய் குறுக்கிட்டு, வழக்கு விசாரணையின்போது வழக்கை ஏன் தாமதம் செய்கிறீர்கள் என்று அடிக்கடி கூறுவீர்களே. இப்போது ஏன் அவ்வாறு கூறவில்லை என்று வினவினார். பின்னர் வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்டு மாதம் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அடுத்த விசாரணையின்போது இருதரப்பினரும் கூற வேண்டியதை தெரிவிக்கலாம் என்றும் நீதிபதி கோகாய் தெரிவித்தார். 

லல்லுவுக்கு எதிராக கால்நடை தீவன ஊழல் வழக்கு கடந்த 20 ஆண்டுகாலமாக நடந்து வருகிறது. இந்த வழக்கை லல்லன் யாதவ் என்பவர் தொடர்ந்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: