ஜம்மு - காஷ்மீர் எல்லையில் 150 முறை ஊடுருவிய சீனா

புதன்கிழமை, 24 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

ஸ்ரீநகர், ஜூலை. 25  - ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் எல்லையில் கடந்த 7 மாதங்களில் 150 முறை சீனா ஊடுருவியிருப்பது தெரியவந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளின் ஊடுருவல் தொடர் கதையாகி வருகிறது. மற்றொரு பிராந்தியமான லடாக் பிரதேசத்தில் சமர் பகுதியை இலக்கு வைத்து சீனா தொடர்ந்து ஊடுருவலை மேற்கொண்டு வருகிறது. கடந்த 7 மாதங்களில் மட்டும் 150 முறை சமர் பகுதியில் சீனா ஊடுருவலை மேற்கொண்டிருக்கிறது. குறிப்பாக ஏப்ரல் மாதம் தெளத் பெக் ஒல்டி பகுதியில் 3 வார முகாமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

சமர் பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை உடைத்து எடுத்துச் சென்றது, குதிரைகளில் வந்து மிரட்டிச் சென்றது போன்ற சம்பவங்களில் தொடர்ந்தும் சீன ராணுவத்தினர் ்ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சமர் பகுதியில் இந்திய எல்லைக்குள் 2 கிலோ மீட்டர் தூரம் சீன ராணுவம் ஊடுருவியிருக்கிறது. இது தொடர்பாக ராணுவ தலைமை தளபதி பிக்ரம்சிங் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணியை சந்தித்துப் பேசினார். இதே போல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனனையும் சந்தித்த பிக்ரம்சிங், எல்லை நிலைமை குறித்து விவாதித்ததாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: