முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை: உம்மன்சாண்டி

வியாழக்கிழமை, 25 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

திருவனந்தபுரம், ஜூலை. 26 - பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார். சோலார் பேனல் மோசடி தொடர்பாக கேரள ஐகோர்ட்டில் நடைபெற்ற விசாரணையில் உம்மன் சாண்டி அரசு மீது நீதிபதிகள் கடும் விமர்சனங்களை தெரிவித்திருந்தனர். இதனால் அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய உம்மன் சாண்டி கூறுகையில், 

பதவி விலக வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை. இது கண்டிப்பாக நடைபெறாது. எனக்கு எதிராக நீதிமன்றம் எந்தவித குற்றச்சாட்டையும் கூறவில்லை என்றார். இந்த மோசடி விவகாரத்தில் விசாரணை துரிதமாக நடைபெறும் வகையில் நீங்கள் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்துவது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டதற்கு, நான் எங்கோ சென்று ஒளிந்து விடவில்லை. இந்த மோசடிக்கும் எனது அலுவலகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார். 

மோசடியில் பாதிக்கப்பட்ட குருவில்லா கொடுத்த புகாரில் தங்கள் உறவினரும், உதவியாளர்களில் ஒருவரும் ஏமாற்றி விட்டதாக தெரிவித்திருப்பது பற்றிய கேள்விக்கு புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள ஆண்ட்ரூ என்ற பெயரில் உறவினர் எனக்கு யாரும் இல்லை. தல்ஜித் என்ற பெயரிலும் உதவியாளர்கள் யாரும் இல்லை என்றார். இந்த மோசடி தொடர்பாக அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும், முந்தைய மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான அரசு முக்கிய வழக்காக இதை கருதவில்லை என்றும் சாண்டி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்