எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஸ்ரீநகர், ஆக. 16 - ஜம்மு காஷ்மீர் எல்லையில் சுதந்திர தின நாளான நேற்றும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் இராணுவம் நடத்தி வரும் தாக்குதல்கள் தொடர்கின்றன. கடந்த 4 நாட்களில் மட்டும் 9 முறைகள் தாக்குதலை நடத்தியிருக்கிறது பாகிஸ்தான். இந்நிலையில் சுதந்திர தினமான நேற்றும் பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியுள்ளது. பூஞ்ச் பகுதியில் மெந்தார் என்ற இடத்தில் இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் தாக்குதலில் ்ஈடுபட்டது. இந்த சண்டையில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் ராணுவம் தாக்கியதில் 5 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம். சில மாதங்களுக்கு முன்பு நடந்த தாக்குதலில் 2 வீரர்கள் பலியானார்கள். அவர்களில் ஒருவரது தலை துண்டிக்கப்பட்டதும் நினைவிருக்கலாம். பாகிஸ்தானின் அத்துமீறல்கள் அடாவடிகள் நாளுக்கு நாள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அப்படிப்பட்ட பாகிஸ்தானிடம் வெங்காயத்திற்காக கையேந்தப் போகிறதாம் மத்திய அரசு.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025