முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க வேவு விமானங்களுக்கு நேரு அனுமதி: சி.ஐ.ஏ.

வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஆக. 17 - 1962 ம் ஆண்டு அமெரிக்காவின் வேவு விமானங்கள் இந்திய விமானப் படை தளத்தைப் பயன்படுத்திக் கொள்ள அப்போதைய பிரதமர் நேரு அனுமதித்தார் என்பதை உறுதிப்படுத்தும் சி.ஐ.ஏ. வின் ஆவணங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
1962 ம் ஆண்டு சீனாவுடனான போரில் இந்தியா தோற்கடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சீனாவின் பிரதேசங்களைக் கண்காணிக்க அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏவின் யு-2 என்ற வேவு விமானம் இந்திய விமான படை தளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று 1962ஆம் ஆண்டு நவம்பர் 11 ம் தேதி நேரு ஒப்புதல் கொடுத்தார் என்கிறது அந்த ஆவணம்.
இரண்டாம் உலகப் போரின் பயன்படுத்தப்பட்டு பின்னர் கைவிடப்பட்ட ஒடிஷாவின் சார்பாட்டியா விமான தளத்தை சிஐஏ வேவு விமானங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை 1963 ம் ஆண்டு ஜூன் 3 ம் தேதியன்று நடைபெற்ற அமெரிக்க அதிபர் கென்னடி, இந்திய ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் இடையேயான சந்திப்பின் போதும் உறுதி செய்யப்பட்டதாகவும் அந்த ஆவணங்கள் கூறுகின்றன. இருப்பினும் நேரு மறைந்ததால் ஒடிஷாவில் இருந்து அந்த ஆப்பரேஷன் தொடங்கப்படவில்லை என்று அந்த 400 பக்க ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்