முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லண்டன் விமான நிலையத்தை தகர்க்க தீவிரவாதிகள் சதி?

ஞாயிற்றுக்கிழமை, 18 ஆகஸ்ட் 2013      உலகம்
Image Unavailable

 

லண்டன், ஆக.18 - லண்டன் விமான நிலையத்தை தகர்க்க அல்கய்தா பெண் தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத் துறை தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான், ஈரான், பாகிஸ்தான், சிரியா உள்ளிட்ட நாடுகளில்

கடந்த மாதம் பல்வேறு தற்கொலைப் படை தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. இந்த நாடுகளில் சிறைகளை தகர்த்தனர். அப்போது ஏராளமான தீவிரவாதிகள் தப்பி ஓடிவிட்டனர். 

இதற்குப் பின்னணியாக அல்கய்தா தீவிரவாத இயக்கம் இருந்துள்ளது  என்பது தெரியவந்துள்ளது என்று சர்வதேச போலீஸார் தெரிவித்தனர். இதற்கிடையே பல்வேறு முஸ்லிம் நாடுதளில் உள்ள அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.  இதையடுத்து இந்த நாடுகள் தங்களது தூதரகங்களை  ஒரு வரரம் மூடின. 

அல்கய்தா இயக்கத்தின் பெண் தீவிரவாதிகள், தங்களது மார்பகங்களில் வெடிகுண்டுளை கட்டிக்கொண்டு லண்டனில் உள்ள ஹீப்ரு விமான நிலையத்தை தகர்க்கப்போவதாக இங்கிலாந்து நாட்டின்  உளவுத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அறுவை சிகிச்சை மூலம் மார்பகத்துக்குள் வைக்கப்பட்ட வெடிகுண்டுகளை ஸ்கேனர் மற்றும் மெட்டல் டிடெக் டர் மூலம் கண்டுபிடிக்க முடியாது. ஒரு வகை ரசாயனத்தை ஊசி மூலம் உடலில் செலுத்தி வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ய முடியும் என்பது தெரிய வந்துள்ளது. அல்கய்தாவின் வெடிகுண்டு நிபுணர் இபுராகிம்அல்அசிரி இதை உருவாக்கி உள்ளார்.  எனவே ஹீப்ரு விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago