நாடாளுமன்றம் முன்பு சாட்டையால் அடித்துக் கொண்ட எம்.பி

வெள்ளிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஆக. 24 - தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்றம் முன்பு சாட்டையாலே தம்மை தாமே அடித்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆந்திர காங்கிரசை சேர்ந்த எம்.பி-க்கள் 7 பேரும், தெலுங்கானா எம்.பி-க்கள் 4 பேரும் சஸ்பென்ட் செய்யப்படுவதற்கான தீர்மானம் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. ஆனால் அமளி காரணமாக அத்தீர்மானம் நேற்று முன்தினம் நிறைவேறவில்லை. இந்த 4 தெலுங்கு தேச எம்.பிக்களில் ஒருவரான சிவபிரசாத், நாடாளுமன்றம் முன்பு சாட்டையால் அடித்துக்கொண்டு தமது எதிர்ப்பை பதிவு செய்தார். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. நாடாளுமன்றத்துக்குள்ளேயே சாட்டையால் தம்மை அடித்துக் கொண்டு எதிர்ப்புத் தெரிவிக்கவும் அவர் திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: