ஊடகங்களின் சொத்து நம்பகத்தன்மையே: பிரதமர்

சனிக்கிழமை, 24 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஆக. 25 - ஊடகங்களின் மிகப் பெரும் சொத்தாக இருப்பது நம்பகத்தன்மைதான் என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.டெல்லியில் நேற்று நடைபெற்ற தேசிய ஊடக மையம் திறப்பு விழாவில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங், அண்மைக்காலமாக ஊடகத்துறை பெரும் வளர்ச்சியை எட்டியிருக்கிறது. அனைத்து மக்களது தேவைகளையும் நிறைவேற்றும் ஊடகங்கள் இந்தியாவின் முக்கிய வழிகாட்டியாக உள்ளன. நாட்டின் பொருளாதார மேம்பாடு, தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் ஊடகங்களின் பங்கு மிகப் பெரியது. ஊடகங்களைப் பொறுத்தவரையில் நம்பிக்கைதான் அவற்றின் மிகப் பெரிய சொத்து. சமூக மாற்றங்களை, நிகழ்வுகளை பிரதிபலிக்கக் கூடிய கண்ணாடியும் கூட ஊடகங்கள்தான்.

புலனாய்வு என்ற பெயரில் பொய்யான தகவல்களை ஊடகங்கள் வெளியிடக் கூடாது. இப்போது சமூக வலைதளங்கள் விஸ்வரூபமெடுத்துவிட்ட நிலையில் அவதூறு பிரசாரங்கள் தொடர்பாக எச்சரிக்கையாக இருக்க வேண்டியதும் அவசியம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: