முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கைக்கு ஐ.நா. மனித உரிமை கமிஷன் கடும் எச்சரிக்கை

திங்கட்கிழமை, 9 செப்டம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

கொழும்பு,செப்.10 -  என்னை சந்தித்தவர்கள் மீது இலங்கை அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்தால் அந்த நாடு பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கமிஷன் பிரதிநிதி நவநீதம் பிள்ளை கடுமையாக எச்சரித்துள்ளார். 

இலங்கையில் போர் நடந்தபோது தமிழர்கள் பகுதியில் சிங்கள ராணுவம் சர்வதேச போர் விதிமுறைகளை மீறி நடந்தது. இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். இளம் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டனர். இதற்கு சம்மதிக்காத இளம் பெண்கள் படுகொலை செய்யப்பட்டனர். பள்ளி சிறுவர், சிறுமிகள் கடத்தி படுகொலை செய்யப்பட்டனர். விஷகுண்டுகளை வீசி ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்தனர். இதற்கு பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் மறைமுகமாக ஆதரவு கொடுத்தன. மத்திய அரசும் கண்டுகொள்ளாமல் போய்விட்டது. ஏராளமான மக்கள் இன்னும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு போதுமான சுகாதார வசதிகளை அதிபர் ராஜபக்சே தலைமையிலான சிங்கள அரசு செய்து கொடுப்பதில்லை. 

இந்தநிலையில் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கமிஷனானது தனது பிரதிநிதியான நவநீதம் பிள்ளையை இலங்கைக்கு அனுப்பி வைத்தது. இலங்கை வந்து சேர்ந்த நவநீதம் பிள்ளை அதிபர் ராஜபக்சே உள்பட அந்த நாட்டு முக்கிய தலைவர்களை சந்தித்து பேசினார். அப்போது இலங்கை தமிழர்களுக்கு சில நலத்திட்டங்களை செயல்படுத்தும்படி கேட்டுக்கொண்டார். இதை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று ராஜபக்சே வெளிப்படையாகவே கூறிவிட்டார். மேலும் மனித உரிமை மீறல்கள் குறித்து தெரிந்து கொள்வதற்காக தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கு நவநீதம்பிள்ளை சென்றார். அங்கு பெண்கள், இளைஞர்கள், உள்பட ஏராளமானோர்களை சந்தித்து மனித உரிமை மீறல் குறித்து நேரில் கேட்டறிந்தார். முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அப்பாவி தமிழர்களையும் சந்தித்து பேசினார். பின்னர் பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள், புகைப்படக்காரர்களையும் சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் கூறிய உண்மைகளை தனது அறிக்கையில் நவநீதம் பிள்ளை சேர்த்துள்ளார். 

இதற்கிடையில் நவநீதம் பிள்ளைய சந்தித்த பத்திரிகையாளர்களை இலங்கை அரசு மிரட்டுவதாக தெரியவந்துள்ளது. இதற்கு நவநீதம் பிள்ளை கடுமையாக எச்சரித்துள்ளார். தம்மை சந்தித்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது இலங்கை அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. அப்படி எடுத்தால் இலங்கை அரசானது கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கடுமையாக எச்சரித்துள்ளார். நான் சந்தித்தவர்கள் கூறிய அனைத்தும் உண்மையாக இருக்கிறது. அதனால் அவர்கள் கூறியதை எனது அறிக்கையில் சேர்த்துள்ளேன். அதை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கமிஷனிடம் சமர்ப்பிப்பேன் என்று நவநீத கிருஷ்ணன் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்