முக்கிய செய்திகள்

மும்பை-வாஷிங்டன் தாக்குதல் சம்பவம் - அமெரிக்கா உறுதி

புதன்கிழமை, 11 மே 2011      இந்தியா
Romer 0

 

ஆமதாபாத்,மே.11 - மும்பை மற்றும் வாஷிங்டன்னில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை கையாளுவதில் வெவ்வேறு கொள்கைகளை கையாளமாட்டோம். இந்த தாக்குதலால் இந்தியா-அமெரிக்கா இடையே ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் திமோதி ஜே. ரோய்மர் தெரிவித்துள்ளார். 

கடந்த 2001-ம் ஆண்டு செட்படம்பர் மாதம் 9-ம் தேதி வாஷிங்டன்,நியூயார்க் ஆகிய நகரங்களில் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் விமானத்தை கடத்திவந்து தாக்குதல் நடத்தினர். அதனை அடுத்து கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26-ம் தேதி மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். இந்த இரண்டு தாக்குதலிலும் இருநாடுகளுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டது. வாஷிங்டன், நியூயார்க் நகரங்கள் தாக்கப்பட்டதையொட்டி ஆப்கானிஸ்தானில் அமெரிக்க கூட்டுப்படை போர் தொடுத்தது. அங்கு இருந்த தலிபான் அரசை நீக்கி,ஜனநாயக முறையில்  அரசு அமைய அமெரிக்கா உதவி செய்தது. அல்கோய்தா தீவிரவாத இயக்க தலைவன் பின்லேடனை கொள்வதற்கு அமெரிக்கா ராணுவம் தேடுதல் வேட்டையை தொடங்கியது. ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு பிறகு பினலேடனை அமெரிக்க ராணுவம் கண்டுபிடித்து சுட்டுக்கொ

ன்றது. இதற்காக அமெரிக்க அரசு 80 ஆயிரம் கோடி ரூபாயை செலவு செய்துள்ளது. மும்பையை தாக்கிய தீவிரவாதிகளில் பலரும் தாக்குதலுக்கு உதவி செய்தவர்களும் மும்பையில் இருந்த தப்பியோடி பாகிஸ்தானுக்கு தப்பியோடி விட்டனர். அவர்களுக்கு பாகிஸ்தான் அரசு தேவையான உதவிகளை செய்து வருவதோடு நாடு முழுவதும் அவர்கள் சுதந்திரமாக உலாவி வருகிறார்கள். இந்தநிலையில் ஆமதாபாத் வந்த இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் திமோதி ஜே.ரோய்மர் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் நியூயார்க், மும்பை தாக்குதலை நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் அமெரிக்கா இரட்டை கொள்கையை கடைப்பிடிக்காது என்றார். இந்த தாக்குதல்கள் நடந்ததில் இருந்து இரண்டு நாடுகளும் நெருங்கி உறவை வளர்த்துக்கொள்ள தொடங்கிவிட்டன. இந்த இரண்டு தாக்குதல் விஷயத்தில் அமெரிக்க இரட்டை கொள்கையை அமெரிக்கா கடைப்பிடித்து வருவதாக தெரிகிறதே என்று நிருபர்கள் கேட்டதற்கு ரோய்மர் மேற்கண்டவாறு கூறினார். நியூயார்க் இரட்டை கோபுரங்கள் மீது அல்கொய்தா தீவிரவாத இயக்கம் தாக்குதல் நடத்தியதில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். அதில் இந்தியர்கள் சுமார் 50 பேர். மும்பையில் நடந்த தாக்குதலில் சுமார் 200 பேர் பலியானார்கள். அதில் அமெரிக்கர்கள் 6 பேர். இந்த தாக்குதலில் இருந்து தீவிரவாத்தை ஒழிக்க இந்தியாவும், அமெரிக்காவும் நெருங்கி செயல்பட்டு வருகின்றன என்று ரோய்மர் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: