முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் அதிபராக பதவியேற்றார் மம்னூன்

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், செப். 11 - பாகிஸ்தானின் 12 வது புதிய அதிபராக இந்தியாவில் பிறந்த மம்னூன் ஹூசேன் பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சவுத்ரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நவாஸ் ஷெரீப், முப்படை தளபதிகள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் அதிபர் பதவியில் இருந்து விலகிய ஆசிப் அலி ஜர்தாரியும் கலந்து கொண்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பாகிஸ்தான் வரலாற்றில் தேர்தலில் போட்டியிட்ட ஒருவர் அதிபராக முழுமையாக 5 ஆண்டுகள் இருந்தவர் என்ற பெருமையை படைத்தவர் ஜர்தாரி ஒருவர்தான். 

அதிபர் தேர்தலின் போது ஜர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி தேர்தலை புறக்கணித்த நிலையிலும் புதிய அதிபருக்கு ஜர்தாரி வாழ்த்து கூறியுள்ளார். பாகிஸ்தான் முஸ்லீம் லீக்(நவாஸ் கட்சி) சார்பில் போட்டியிட்ட ஹூசைனை எதிர்த்து வலுவான வேட்பாளர் எவரும் போட்டியிடாததால் மிக சுலபமாக வெற்றி பெற்றார். 73 வயதான ஹூசேன் இந்தியாவில் ஆக்ராவில் பிறந்தவர். 47 ம் ஆண்டு இந்தியா சுதந்திரமடைந்த போது பெருவாரியான உருது பேசும் முஸ்லீம்களுடன் இவரது குடும்பமும் பாகிஸ்தானுக்கு குடியேறியது. 

கராச்சியில் ஜவுளிக் கடை வர்த்தகராக இருந்த ஹூசேன் நவாஸ் ஷெரீப்பின் தீவிர ஆதரவாளர். முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பின் ஆட்சியின் போது நவாஸ் ஷெரீப் சவுதிக்கு நாடு கடத்தப்பட்டார். அப்போது புதிதாக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் உருவானது. இதில் ஹூசைனும் தன்னை இணைத்து கொண்டார். நவாஸ் ஷெரீப்புக்காக 1999 ல் தெற்கு சிந்து மாகாண கவர்னராக பதவி பொறுப்பேற்ற 5 மாதங்களில் இவர் பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. கராச்சியில் மதரஸா பள்ளியில் பயின்ற ஹூசேன் பின்னர் காமர்ஸ் பட்டதாரியானார். கராச்சி வர்த்தக கழகத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago