முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கைக்கு போர்க் கப்பல்களை இந்தியா வழங்குவது உறுதி

புதன்கிழமை, 11 செப்டம்பர் 2013      அரசியல்
Image Unavailable

 

சென்னை.செப்.12 - இலங்கைக்கு 2 போர்க் கப்பல்களை இந்தியா வழங்குவது உறுதி ,என்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் மேலும் கூறியதாவது:- இந்திய அரசு, இலங்கைக்கு 2 போர் விமானங்களை வழங்க உள்ளது. இது இரு நாடுகளுக்கு இடையே இப்போது ஏற்பட்ட புதிய ஒப்பந்தம் அல்ல. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா-இலங்கைக்கு இடையே நடந்த ஒப்பந்தம் ஆகும். அதில் இரு நாடுகளின் பிரதிநிதிகளும் கையெழுத்திட்டுள்ளனர்.

இலங்கைக்கு இந்திய போர்க் கப்பல்களை கொடுக்க கூடாது என்று தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. அவர்களுடைய கருத்துக்களை பிரதமர் மன்மோகன்சிங்கிடம் தெரிவிக்கிறேன்.

இந்த ஒப்பந்தத்தின்படி 2017-18-ம் ஆண்டில் போர்க் கப்பல்களை இந்தியா கொடுக்க முடிவு செய்துள்ளது.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடலோர படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது குறித்து இரு நாட்டு பிரதிநிதிகளும் மீனவர்களும் கலந்து பேசி முடிவு எடுத்தால் இந்த பிரச்சினை முடிவுக்கு வரும்.

காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்வது இப்போது வரை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழர்களின் ஒவ்வொருவருடைய உணர்வையும் பிரதமர் அறிவார். தமிழ் மக்களின் உணர்வுகளை அவருக்கு தெரிவித்து இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago