முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலக்கரி முறைகேடு: 7 மாநிலங்களுக்கு நோட்டீஸ்

வெள்ளிக்கிழமை, 27 செப்டம்பர் 2013      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, செப்.28 - நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் மாநில அரசுகளின் செயல்பாடு குறித்து விளக்கம் அளிக்குமாறு 7 மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு மோசடிப் புகார் தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி லோதா தலைமையிலான அமர்வு 4 கேள்விகளுக்கு பதில் தருமாறு ஆந்திரா, மத்தியபிரதேசம், மேற்கு வங்கம், ஒடிசா, ஜார்கண்ட், சத்தீஷ்கர், மகாராஷ்டிரம் ஆகிய மாநில அரசுகள் அக்டோபர் மாதம் 29-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. 

மாநில அரசுகளின் கருத்தை கேட்ட பின்னர் தான் நிலக்கரி சுரங்கம் ஒதுக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள் குறித்து விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 1993-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு அனுமதிகளை ரத்து செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதற்கு பதிலளித்த மத்திய அரசின் அட்வகேட் தெனரல் வாறனவதி, நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன் மத்திய அரசின் பணி  முடிந்து விடுகிறது. தனியார் நிறுவனங்கள் இயற்கை வளமான நிலக்கரி சுரங்கங்களுக்கு உரிமை கோர முடியாது. மாநில அரசிடம் பல்வேறு ஒப்புதல் பெற்ற பின்னர் தான் தனியார் நிறுவனங்கள் ஏநிலக்கரி எடுக்கும் உரிமையைப் பெறுகின்றன, 

எந்த ஒரு நிறுவனத்துக்கும் ஆதரவாக மத்திய அரசு செயல்படவில்லை. இந்த விவகராத்தில் மத்திய அரசு அனைத்து விதிகளையும் கடைபிடித்துள்ளது ணஎன்றார்.

இதையடுத்து மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்து விளக்கமளிக்க மாநில அரசுகளுக்கு சுப்ரீம்கோர்ட்  நோட்டீஸ் அனுப்பு உத்தரவிட்டுள்ளது.

  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago