ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர் மேனேஜருக்கு சிறை தண்டனை

no image 36

 

கொச்சி, மே13 - ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர் கிளை  மேலாளர் ஒருவருக்கும் மேலும் 4 பேருக்கும் ஒரு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள ஸ்டேட்  பேங்க் ஆப் மைசூர் வங்கி கிளையில் மேனேஜராக இருந்தவர் நாராயண சுப்பிரமணி. இவர் மெசர்ஸ் கர்ம் அண்ட் கோ கம்பெனியின் கடனில் மோசடி செய்துள்ளார்.

இந்த மோசடியில் ஸ்டேட் பேங்க ஆப் மைசூருக்கு ரூ.1.62 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதை அடுத்து நாராயண சுப்பிரமணி மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.

கடந்த 2003 ம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ம் தேதி இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் மேலும் சிலரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

கடந்த 8 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை கொச்சியில் உள்ள சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜோதித்ராமந்த் நேற்று தீர்ப்பு  கூறினார்.

குற்றம் சாட்டப்பட்டுள்ள நாராயண சுப்பிரமணிக்கும் மேலும் 4 பேருக்கும் தலா 1 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து  நீதிபதி தீர்ப்பு கூறினார்.

மேலும் சுப்பிரமணிக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ