Idhayam Matrimony

பாக்., ராணுவம் சுட்டதில் எல்லைப் பாதுகாப்பு வீரர் பலி

புதன்கிழமை, 23 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

ஜம்மு,அக். 24 - பாகிஸ்தான் ராணுவம் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு எல்லையில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு இது வரை 200_க்கும் மேற்பட்ட அத்து மீறல்களை பாகிஸ்தான் நடத்தி உள்ளது. பாகிஸ்தான் தினமும் இரவு நேரங்களில் பீரங்கி தாக்குதல், ராக்கெட் வீச்சு போன்ற சம்பவங்களில் ஈடுபடுவதால் எல்லையோர மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்து வெளியேறியுள்ளனர். இதனால் எல்லையில் தொடர்ந்து  பதற்றம் நிலவுகிறது. இதுகுறித்து காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, உள்துறை அமைச்சர் ஷிண்டே  ஆகியோர் கடந்த 4 நாட்களுக்கு முன் ஆலோசனை ந்டத்தினர். இதையடுத்து பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்குமாறு எல்லைப்பாதுகாப்பு படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் மறுநாளே 50 இடங்களில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ்.புரா செக்டரில் திடீரென பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்து சுட்டது. இந்திய வீரர்கள் பதிலுக்கு சுட்டனர். இருதரப்பினருக்கிடையே சுமார் 4 மணி நேரம் துப்பாக்கி சண்டை நடைபெற்றது.  

இதில் எல்லைப்பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பலியானார். 6 வீரர்கள் படுகாயமடைந்து ராணுவ மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்திய வீரர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு மத்திய அரசு கடுஎம கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் நடத்தி வரும் தொடர் அட்டூழியத்தால் இந்திய எல்லைபடைக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. என்றாலும் மத்திய அரசு வெறும்கண்டனத்தை தெரிவித்து விட்டு அமைதியாக இருந்து வருகிறது என்று பல தரப்பு அரசியல் தலைவர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago