பஹாமா தீவில் படகு விபத்து: 30 அகதிகள் பரிதாப சாவு

Image Unavailable

 

மியாமி, நவ.28 - பஹாமா தீவு அருகே நடுக்கடலில் படகு கவிழந்ததில் அகதிகள் 30 பேர் பலியானார்கள். அமெரிக்காவின் மிகப்பெரிய நகரான மியாமி அருகே நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சுற்றி ஏராளமான குட்டி தீவுகள் உள்ளன. இங்குள்ள ஹெய்தி தீவில் கடந்த ஒரு வாரமாக குடிநீர், உணவு கிடைக்காததால், அங்கிருந்து பஹாமா தீவிற்கும், அமெரிக்காவின் புளோரிடா  உள்ளிட்ட பகுதிகளுக்கும் மக்கள் அகதிகளாக இடம் பெர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் ஹெய்தியில்  இருந்து ஒரு படகில் 150-க்கும் மேற்பட்டோர் அகதிகளாக பஹாமா தீவிற்கு புறப்பட்டு சென்றனர். படகில் ஆட்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. மியாமில் இருந்து  200 மைல் தூரத்தில் பஹாமா தீவு அருகே நடுக்கடலில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு திடீரென கவிழந்தது. இதில் படகில் இருந்தவர்கள் கடலில் தத்தளித்தனர். தகவல் அறிந்ததும்  அமெரிக்க கடலோர பாதுகாப்பு படை, மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் அகதிகள் 110 பேரை பத்திரமாக மீட்டு மற்றொரு படகில் கரைக்கு அனுப்பி வைத்தனர். நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில் 30 பேர் பலியானார்கள். மேலும் சிலரை காணவில்லை. இதனால், பலியானோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து விசாரணை நடக்கிறது. அகதிகளாக வேறு நாட்டுக்கு செல்ல நினைக்கும் மக்களிடம் கடத்தல்காரர்கள், மீனவர்கள்  சட்ட விரோதமாக கூடுதல் பணத்தை வாங்கிக்கொண்டு படகில் அதிகமான ஆட்களை ஏற்றிச்செல்கின்றனர். படகில் அதிகமான வானிலை, படகில் அதிகமான ஆட்களை ஏற்றிசெல்வதால் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகிறது. இதனால் உயிரிழப்பு சம்பவம் அடிக்கடி நடக்கிறது. இந்த ஆண்டில் பஹாமா தீவு அருகே கடலில் தவித்த 1,550 அகதிகள் உயிருடம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ