பிரபாகரனின் வீடுகள் அரசுடைமை ஆகிறது: ஊடகம்

Image Unavailable

 

கொழும்பு, டிச.3 - விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வல்வெட்டித் துறை மற்றும் வவுனியாவிலுள்ள இரண்டு வீடுகளும்  அரசுடைமை ஆக்கப்பட உள்ளதாக  இலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

இலங்கையில் நடைபெற்ற இறுதிக் கட்டப் போருக்குப் பிறகு சொத்து மற்றும் உயிர்  சேதங்கள் தொடர்பான கணக்கெடுப்பு சமீபத்தில் நடைபெற்றது. இன்த கணக்கெடுப்பின்போது பிரபாகரனின் இரண்டு வீடுகள் உள்ளிட்ட பல அவரது சொத்துக்கள் உரிமை கோரப்படாத நிலையில் பிரபாகரனின் சொத்துக்களுக்கு உரிமை கோர அவரது குடும்பத்தைச் சேர்ந்த எவரும் உயிருடன் இல்லாத காரணத் தால் அவரது சொத்துக்களும், போர் காரணமாக முழுமையாக நாட்டை விட்டு வெளியேறி வாழ்ந்து வரும் மக்களின் சொத்துக்களும் அரசுடைமை ஆக்கப்பட உள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

பிரபாகரனின் தந்+தையும், தாயும் யாழ்ப்பாணத்தில் உள்ள வீட்டில் 80_ம் ஆண்டு வரை வசித்து வந்தனர். அப்போது ராணுவதுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற போரை அடுத்து அவர்கள் இந்தியாவுக்குச் சென்று விட்டனர். அதன்பின் 2002_2004_ம் ஆண்டு சமாதான பேச்சுவார்த்தை நடந்தபோது பிரபாகரனின் பெற்றோர் மீண்டும் இலங்கை திரும்பினர். ஆனாலும் யாழ்ப்பாணத்தில் உள்ள வீட்டில் எவரும் வசிக்கவில்லை. அதே சமயம் வன்னியில் உள்ள அவரது பாதுகாப்பான வீட்டில் பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் அவ்வப்போது வசித்து வந்தனர்.  

போர் காரணமாக இலங்கை வடக்கில் இருந்து 10 லடசத்துக்கும் மேற்பட்டோர் வெளியேறி வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். அவர்களின் வீடுகளை விடுதலைப் புலிகள் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது இலங்கை ராணுவ த்தினர் அவற்றைக் கைப்பற்றி பயன்படுத்தி வருன்றனர்.                                       

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ