அதிபராக வருவதற்கான தகுதி ஹிலாரிக்கு உள்ளது: ஒபாமா

சனிக்கிழமை, 7 டிசம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், டிச.8 - அமெரிக்க அதிபராக வருவதற்கான தகுதி ஹிலாரி, ஜோ பிடனுக்கு உள்ளது எந்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:

அமெரிக்காவின் அதிபராக வருவதகற்கு யார் தகுதி உடையவர்கள் என்று கேட்கிறீர்கள். அமெரிக்க அதிபராக வருவதற்கான தகுதி ஹிலாரி, துணை அதிபர் ஜோ பிடனுக்கு உள்ளது. 2016_ம் ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் 66 வயதாகும் ஹிலாரி, 71 வயதாகும் ஜோபிடன் ஆகியோர் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்களாக பரிசீலிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படும் நிலை உள்ளது. அமெரிக் வரலாற்றில் சிறந்த துணை அதிபராக ஜோ பிடன் விளங்கி வருவதாக நினைக்கிறேன். பல சிக்கலான பிரச்சனைகளில் என்னுடன் அவர் இருக்கும்போது தீர்வு காண்கிறேன். இதற்கு உதாராணமாக மருத்துவ  காப்பீட்டுத் திட்டத்தை குறிப்பிடடலாம். ஹிலாரியைப் போல் சிறந்த வெளியுறவு அமைச்சரை அமெரிக்கா பெற்றிருக்க வில்லை. அமெரிக்க வெளியுறவு விவகாரங்களில் அவரது திறமையான நடவடிக்கை பெரிதும் உதவியுள்ளது என்றார் ஒபாமா.  

இதை ஷேர் செய்திடுங்கள்: