எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மே. 20 - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 7 போட்டியிலும் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோனி தெரிவித்தார். இது பற்றிய விபரம் வருமாறு - ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சென்னையில் நடந்த 64 -
வது லீக் ஆட்டத்தில் கேப்டன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 ரன் வித்தியாசத்தில் கொச்சி டஸ்கர்ஸ் அணியை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன் எடுத்தது. ரித்திமான் சகா 33 பந்தில் 49 ரன்னும்,(7 பவுண்டரி, 3சிக்சர்), மைக் ஹஸ்சே 32 ரன்னும் எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து விளையாடிய கொச்சி அணியால் 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன்னே எடுக்க முடிந்தது. ஹாட்கே 42 பந்தில் 51 ரன்
னும், (3 பவுண்டரி, 2 சிக்சர்), மெக்குல்லம் 33 ரன்னும் எடுத்தனர். அஸ்வின், பொலிஞ்சர், ஜகாதி, பிராவோ தலா 1 விக்கெட் எடுத்தனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்ற 8-வது வெற்றி இதுவாகும். 18 புள்ளி ளை பெற்று அந்த அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்து ளது. சேப்பாக்கம் மைதானத்தில் சூப்பர் கிங்ஸ் தொடர்ந்து பெற்ற 7 -வது வெற்றி இதுவாகும்.
ஏற்கனவே, கொல்கத்தா, பெங்களூர், புனே, டெக்கான், ராஜஸ்தா
ன், டெல்லி அணிகளை இங்கு வென்று இருந்தது. கொச்சி அணி 8 - வது தோல்வியை தழுவி உள்ளது.
இந்த வெற்றி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி கூறிய
தாவது - சோப்பாக்கம் மைதானத்தில் தொடர்ந்து 7ஆட்டத்திலும் வெ
ற்றி பெற்று சாதன படைத்துள்ளோம். இது உண்மையிலேயே பெரு
மை அளிக்கிறது. இது மிகப் பெரிய சாதனையாகும்.
இந்த ஆட்டங்கள் அனைத்திலும் நாங்கள் எளிதாக வெற்றி பெற்றதாக கருத வேண்டாம். சில ஆட்டங்களில் கடுமையாக போராடித்தான் வென்றோம். அடுத்த சுற்றில் மிகப் பெரிய ஆட்டத்துக்கு நாங்கள் தயா
ராகி விட்டோம்.
எங்களது பந்து வீச்சும், பீல்டிங்கும் சிறப்பாக இருந்தது. சுழற் பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் பெற்று இருந்தது. ஆட்ட நாயகன் விருது பெற்ற ரித்திமான் சகா கூறியதாவது -
எனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டேன். எந்தவித நெருக்கடியும், பதட்டமும் இல்லாமல் நான் விளையாடினேன் என்று மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இளம் வீரரான அவர் கூறினார்.
இந்தப் போட்டியில் தோல்வி அடைந்த கொச்சி டஸ்கர்ஸ் அணிக்
கேப்டன் பார்திவ் படேல் கூறியதாவது - சேவாக், தோனி போன்ற அதிரடியான வீரர் என்று நான் என்னை சொல்லவில்லை.
எனது முழுத் திறமையை வெளிப்படுத்தினேன். 152 ரன் என்பது எளி
தான இலக்கு தான். 15 ஓவருக்குப் பிறகும், எங்களது ஆட்டத்தில் அதி
ரடி இல்லை. இதனால் நாங்கள் தோற்றோம்.
சென்னை சூப்பர் கிங்சை 152 ரன்னுக்குள் கட்டுப் படுத்தி விட்டோம். எங்களது அணி சார்பில் ஆர். பி. சிங் அபாரமாக பந்து வீசினார். இவ் வாறு படேல் தெரிவித்தார்.
கேப்டன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதனது கடைசி லீக் ஆட்டத்தில் பெங்களூர் அணியுடன் மோத இருக்கிறது. இந்தப் போட்டி வரும் 24 -ம் தேதி நடக்க இருக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026


