முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிராவில் 2 மாதத்தில் லோக் ஆயுக்தா: முதல்வர்

ஞாயிற்றுக்கிழமை, 29 டிசம்பர் 2013      ஊழல்
Image Unavailable

 

மும்பை,டிச.30 - மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் 2 மாதங்களில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரப்படும் என முதல் அமைச்சர் பிருத்வி ராஜ் சவாண் அறிவித்துள்ளார்.  மகாராஷ்டிரா மாநில முதல்வர் பிருத்வி ராஜ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:_

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஊழலை ஒழிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ஊழலை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு வழிகாட்டுதல் கொடுத்துள்ளார். அதன்படி வரும் 2 மாதங்களுக்குள் லோக் ஆயுக்தா அமுல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.  ஆதர்ஷ் ஊழல் விவகாரத்தில் விசாரணை கமிஷன் அறிக்கையை மாநில அரசு புறக்கணித்துவிட்டது என்று ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி இருந்தார். இதன் மூலம் ஊழல் செய்த கட்சி தலைவர்கள் தப்பிக்க மாநில அரசு உதவியதாகவும் ராகுல் தெரிவித்திருந்தார்.  டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது குறித்து கேட்டபோது டெல்லியில் உள்ள உள்ளூர் நிலவரம் காரணமாக ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நிச்சயம் காங்கிரஸ் கட்சியைத்தான் வெற்றிபெற செய்வார்கள். மக்கள் மோடியை உற்று கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஒருபுறம் கலவரம் செய்துவிட்டு மறுபுறம் போலீசாரை தவறுதலாக பயன்படுத்தி குடிமக்களை வேவுபார்க்கும் செயலை செய்யும் மோடி உள்நோக்கத்துடன் செயல்படுகிறார் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்றார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago