லிபியாவில் பயங்கரம்: அமைச்சர் சுட்டுக் கொலை

Libya 0

 

திரிபோலி, ஜன. 13 - லிபியாவில் மர்ம நபர்களால் தொழில் அமைச்சர் சுட்டுக் கொல்லப்பட்டார். இது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

ஆப்பிரிக்க நாடான லிபியாவின் துணை தொழில் அமைச்சராக இருந்தவர் ஹசன் அல் டிரோயி. நேற்று முன் தினம் இரவு அவர் தனது சொந்த நகரமான சிர்தேவுக்கு சென்று இருந்தார். 

அங்குள்ள மார்க்கெட் அருகே சென்ற போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கியுடன் அங்கு வந்தனர். 

பின்னர் அவரை சரமாரியாக சுட்டுக் கொன்றனர். இந்த தகவலை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அதே நேரத்தில் லிபியாவின் தென் பகுதியில் 2 பிரிவினருக்கு இடையே நடந்த மோதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். 

லிபியாவில் கடந்த 2011 _ ஆண்டு மக்கள் புரட்சி ஏற்பட்டது. அதிபராக இருந்த மும்மர் கடாபி புரட்சி படையால் கொல்லப்பட்டார். 

அதைத் தொடர்ந்து புதிய அரசு பதவி ஏற்றது. அதில் இருந்து அங்கு வன்முறை

சம்பவங்கள் தலை விரித்தாடுகின்றன. 

தீவிரவாத குழுக்கள் உருவாகி மனிதர்களை கொன்று குவித்து வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ