முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலிய ஓபன்: லீ நா இறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம்

வியாழக்கிழமை, 23 ஜனவரி 2014      விளையாட்டு
Image Unavailable

 

மெல்போர்ன், ஜன. 24 - ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவின் அரை இறுதிச் சுற்றில் சீன வீராங்கனை லீநா

வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். 

இந்த வருடத்தின் முதலாவது கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் கடந்த 2 வார காலமாக வெகு விமர்சையாக நடந்து வருகிறது 

இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள்

மற்றும் வீராங்கனைகள் களத்தில் குதித்து உள்ளனர். இது இறுதிக் கட்டத்தை அடை

ந்துள்ளது. 

கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதில் பங்கேற்று வரும் முன்னணி வீரர்கள் மற்

றும் வீராங்கனைகள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர். 

மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் அரை இறுதிச் சுற்று ஆட்டம் ஒன்று நடந்தது. இதில் சீன வீராங்கனையான லீநாவும், கனடா வீராங்கனையும் மோதினர். 

இதில் 4_ம் நிலை வீராங்கனையான லீநா அபாரமாக ஆடி 6_2, 6_4 என்ற நேர் செட் கணக்கில் 30ம் நிலை வீராங்கனையான பவுச்செட்டை தோற்கடித்தார். 

இந்த வெற்றியைப் பெற லீநாவுக்கு 86 நிமிட நேரம் தேவைப்பட்டது. அரை இறுதியில் தோல்வி அடைந்த பவுச்செட்டுக்கு 19 வயது ஆகிறது. 

சீன வீராங்கனை லீநா 3_வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று உள்ளார். இதற்கு முன்பு 2011 மற்றும் கடந்த ஆண்டு இறுதிப் போட்டிக்கு நுழைந்து இருந்தார். 

இதில் 2 முறையும் தோற்றுஇருந்தார். இந்த முறை அவர் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை முதல் தடவையாக கைப்பற்று 

வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

லீநா இறுதிப் போட்டியில் 5_ம் நிலை வீராங்கனை ரட்வன்ஸ்கா(போலந்து) அல்லது 20ம் நிலை வீராங்கனை டொமினிகா சிபுல்கோவாவை (குரோசியா) சந்திக்கிறார். 

ஆண்கள் ஒற்றையர் அரை இறுதிப் போட்டிக்கு ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர், செக் . குடியரசு வீரர் தாமஸ் பெர்டிச் மற்றும் சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்கா ஆகியோர் தககுதி பெற்று  உள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்