பாக்.,கில் இந்து கோயில் காவலாளியை கொன்ற தீவிரவாதிகள்

Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஜன. 28 - பாகிஸ்தானில் இந்து கோயிலின் காவலாளியை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். இது சிறுபான்மையினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் இந்துக்கள் சிறுபான்மையினராக வசிக்கின்றனர். இங்குள்ள ஜந்தா பஜார் என்ற பகுதியில் இந்து கோயில் உள்ளது. 

வழக்கம் போல் நேற்று முன் தினம் அங்கு காவலாளி ஒருவர் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் காவலாளியை சரமாரியாக சுட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். 

இது குறித்து பெஷாவர் நகர் போலீஸ் அதிகாரி பைஷல் முக்தார் கூறுகையில், இது தீவிரவாதிகளின் செயல்தான் என்பது விசாரணையில் தெரிய வந்தள்ளது என்றார். 

இந்த பகுதியில் தொடர்ந்து பாதுகாப்பு படையினருக்கும், தலிபான் மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகளுக்கும் இடையே அடிக்கடி சண்டை நடப்பதுண்டு. 

கடந்த அக்டோபர் மாதம்  இதே போல் சர்ச் வாசலில் காவலாளி ஒருவரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். 

அதன் பின்னர் நவம்பர் மாதம் மேலும் ஒரு இந்து கோயிலின் காவலாளியை சுட்டுக் கொன்றது நினைவு கூறத்தக்கது. 

உச்சகட்டமாக கடந்த செப்டம்பர் மாதம் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் பெஷாவரில் உள்ள சர்ச்சில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த 82 பேர் பலியானார்கள். 

இப்போது இந்து கோயில் காவலாளி சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ