முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4வது ஒரு நாள்: இந்தியா - நியூசி., இன்று மீண்டும் பலப்பரிட்சை

திங்கட்கிழமை, 27 ஜனவரி 2014      விளையாட்டு
Image Unavailable

 

ஹேமில்டன், ஜன. 28 - இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 4_வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஹேமில்டன் நகரில் இன்று நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டியின் மூலம் இந்தியஅணிக்கு முதல் வெற்றி கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் மெக்குல்லம் தலைமையிலான அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. 

இரு அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் ஆட்டத்தில் 24 ரன்னிலும் 2_ வது ஆட்டத்தில் 15 ரன்னிலும், இந்தியஅணி தோற்றது. 

3_வது போட்டி இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வி இன்றி டிராவில் முடிந்தது. இதன் மூலம் 5  போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் நியூசி. அணி 2_ 0என்ற முன்னிலை பெற்று உள்ளது. 

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் 4 _வது ஒரு நாள் போட்டி ஹேமில்டன் நகரில் இன்று பகலிரவாக நடக்கிறது. காலை 6.30 மணிக்கு போட்டி துவங்குகிறது. 

தொடரை இழக்காமல் இருக்க இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது. தோல்வி அடைந்தால் தொடரை இழந்து விடும். 

சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா பயணத்தில் இந்திய அணி ஒரு நாள் தொடரை இழந்து இருந்தது. அதே நிலை நியூசிலாந்திலும் தொடரக் கூடாது. என்ற கவலையில் இந்தியா உள்ளது. 

அதற்கு ஏற்ற வகையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய வீரர்கள் ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கடந்த போட்டியில் ஜடேஜா, அஸ்வின் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி தோல்வியில் இருந்து தப்பியது. 

இதனால் முன்னணி பேட்ஸ்மேன்கள் தங்களது முழு திறமையை வெளிப்படுத்து வது அவசியமாகிறது. இதற்காக அவர்கள் தீவிரப் பயிற்சி எடுத்து உள்ளனர். 

தொடக்க வீரர்கள் தவான், ரோகித் சர்மா, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரகானே, ரெய்னா ஆகியோர் தங்களது பங்களிப்பை உணர்த்த வேண்டும். 

தோனி இந்த முறையாவது டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சொந்த மண்ணில் விளையாடுவதால் நியூசிலாந்து அணி மிகவும் சிறப்பாக காணப்படுகிறது. அந்த அணி வீரர்கள் உற்சாகத்துடன் உள்ளனர். 

நியூசிலாந்து அணியில் குப்டில், வில்லியம்சன், டெய்லர், ஆண்டர்சன் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் சௌதி, மெக்லகன் போன்ற சிறந்த பௌலர்களும் உள்ளனர். 

கேப்டன் மெக்குல்லம் தலைமையிலான நியூசிலாந்து அணி இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று தொடைர கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது. 

இன்றைய ஆட்டமும் பகல் _ இரவாக நடக்கிறது. இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்தப் போட்டி சோனி சிக்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்