முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கப் பேழையில் பாதுகாக்கப்பட்ட 2ம் போப் ரத்தம் கொள்ளை

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

ரோம், ஜன. 29 - இத்தாலியின் ரோம் நகரில் மலை மீது அமைந்துள்ள சர்ச்சில் தங்கப் பேழையில்

பாதுகாக்கப்பட்ட போப் இரண்டாம் ஜா

ன் பாலின் ரத்தத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

இத்தாலியில் ரோம் நகரின் கிழக்கே உள்ள அப்ரூசோ மலைத் தொடரில் சிறிய தேவாலயம் ஒன்று அமைந்துள்ளது 

இங்கு கடந்த 2005 _ம் ஆண்டுகாலமான போப் இரண்டாம் ஜான்பாலின் உடல் அடக்கம் செய்யப்பட்டு உள்ளது. எனவே இது கிறிஸ்தவர்களின் புனித தலமாக விளங்கி வருகிறது. 

மலையின் மீது அழகிய இடத்தில் மிகச் சிறிய தேவாலயமாக இது அமைந்துள்ளது. வாடிகனில் போப் ஆண்டவராக 27 ஆண்டுகள் போப் இரண்டாம் ஜான் பால் பொறுப்பு வகித்தார். 

சுமார் 33 ஆண்டுகளுக்கு முன்பு 1987 ம் ஆண்டு அவரை கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 

அப்போது அவரது உடலில் இருந்து சிந்திய ரத்தத்தை சேகரித்து இந்த

தேவாலயத்தில் ஒரு தங்கப் பேழையில் சேமித்து வைத்துள்ளனர். 

அதனை இயேசுவின் ரத்தமாகவே கருதி கிறிஸ்தவர்கள் போற்றி வணங்கி வருகின்றனர். 

கடந்த 2005 _ம் ஆண்டு போப் காலமானதைத் தொடர்ந்து அவரது விருப்பப்படியே ஜான்பாலின் உடல் இங்கு அடக்கம் செய்யப்பட்டது. 

ஓவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று காலை இங்கு வழக்கம் போல் பிரார்த்தனைகள் நடைபெறும். 

கடந்த 3 நாட்களுக்கு முன்பு தேவாலயத்தை திறக்க வந்த போது ஜன்னல்கள் உடைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இது குறித்து தேவாலய நிர்வாகி பிராங்கா கொரியேரி கூறியதாவது _ 

இரவில் ஜன்னல்களை உடைத்து உள்ளே புகுந்த மர்ம மனிதர்கள், அங்கு போப்பின் ரத்தம் வைக்கப்பட்டிருந்த பேழையை கொள்ளையடித்து சென்று உள்ளனர். 

இது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று அவர் கூறினார். 

அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கப்பேழையில் வைக்கப்பட்டிருந்த போப்பின் ரத்தம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ரோமில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்