முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீர்மூழ்கி கப்பல் காணாமல் போனது உண்மைதான்: ஜப்பான்

வியாழக்கிழமை, 30 ஜனவரி 2014      உலகம்
Image Unavailable

 

டோக்கியோ, ஜன.31 - ஜப்பான் கடற்படைக்குச் சொந்தமான ரூ.31 கோடி மதிப்பிலான ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பல் கடந்த ஆண்டு ஆய்வுப் பணியின்போது காணாமல் போனதை அந்நாட்டு அரசு ஒப்புக் கொண்டுள்ளது. 

இதுகுறித்து ஜப்பான் பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது: 

கடற்படையின் தற்பாதுகாப்புப் படையினர் ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயங்கும் நீரிமூழ்கிக் கப்பலை, கடலின் தரைப்பரப்பு மற்றும் கடல் நீரின் வெப்பநிலை குறித்த ஆய்வுப் பணிக்காக பயன்படுத்தி வந்தனர். ஹோன்சு தீவுக்கும் ஹெக்கைடோவுக்கும் இடையே உள்ள சுகாரு நீர்சந்தி பகுதியில் ஆய்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இந்த ஆளில்லா கப்பல், கடந்த மாதம் காணாமல் போனது. 

3 மீட்டர் நீளம், 2 மீட்டர் அகலம் மற்றும் 5 டன் எடை கொண்ட இந்தக் கப்பலைத் தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டனர். 9 நாட்கள் தேடியபோதும் அதன் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தச் சம்பவம் குறித்து விசாரிப்பதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்