முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5-வது ஒரு நாள்: இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா?

வியாழக்கிழமை, 30 ஜனவரி 2014      விளையாட்டு
Image Unavailable

 

வெலிங்டன், ஜன. 31 - இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5_வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட்  போட்டி வெலிங்டன் நகரில் இன்று நடைபெற இருக்கிறது. 

இந்தத் தொடரில் இந்திய அணி ஒரு வெற்றி கூட பெறாததால் இன்றைய  போட்டியின் மூலம் இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

கேப்டன் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் மெக்குல்லம் தலைமையிலான அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. 

நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே 4 போட்டிகள் முடிவடைந்து விட்டன. இதில் நியூசி. அணி 1,2 மற்றும் 4_வது போட்டியில் வெற்றி பெற்றது. 

இதன் மூலம் அந்த அணி 3 _ 0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இரு அணிகளுக்கு இடையேயான 3_வது போட்டி டிராவில் முடிவடைந்தது. 

இந்நிலையில் இந்தத் தொடரின் கடைசி மற்றும் 5_வது போட்டி வெலிங்டன் நகரில் இன்று பகலிரவு ஆட்டமாக நடக்கிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு துவங்குகிறது. 

ஐ.சி.சி.  தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய அணி இந்தத் தொடரில் மோசமாக ஆடியதால் நம்பர் _ 1 இடத்தை இழந்தது. 

இந்தத் தொடரில் இந்திய அணி ஒரு வெற்றிகூட பெறாதது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனவே இந்திய வீரர்கள் கடைசி போட்டியில் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள். 

மேலும் இந்தத் தொடரில் இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பௌலிங் இரண்டு  ம் மோசமாக இருந்ததால் அணி இதுவரை 3 போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. 

இந்திய அணியின் மோசமான பௌலிங்கிற்கு முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். 

இந்திய அணியில் சிறந்த பேட்ஸ்மேன்கள்

இருந்த போதிலும் அவர்களால் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக ஆடி வெற்றியை தேடித் தர முடியவில்லை. 

எனவே இன்று நடக்கும் 5_வது மற்றும் கடைசி போட்டியில் இந்திய வீரர்கள் பேட்டிங் மற்றும் பௌலிங் இரண்டிலும் கவனம் செலுத்தினால் தான் வெற்றி கிடைக்கும். 

நியூசிலாந்து மற்றும் இந்திய அணிக்கு இடையே நடக்கும் இந்த கடைசி போட்டி வெலிங்டன் நகரில் காலை6.30 மணிக்கு துவங்குகிறது. இந்தப் போட்டி சோனி சிக்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்