நியூசி.,க்கு எதிரான டெஸ்ட்: டிராவிட் நம்பிக்கை

Image Unavailable

 

ஜெய்பூர், பிப். 1 - நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடுவார்கள் என்று முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நம்பிக்கை தெரிவித்தார். 

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வீரர்கள் ஒரு நாள்

போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றனர். 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள டிராவிட் இந்தியாவின் நியூசிலாந்து சுற்றுப் பயணம் குறித்து கூறியதாவது _ 

ரகானே சிறந்த வீரர். ஆனால் அவர் விராட் கோக்லி போன்று நிலைத்து நின்று ஆடுவது இல்லை. போட்டியின் போது வீரர்களுக்கு நெருக்கடி இருக்கத்தான் செய்யும். 

அதை எதிர்கொண்டு நிலைத்து நின்று ஆடினால் பிரகாசிக்க முடியும். ஷாட் பிட்ச் பந்துகளை இந்திய வீரர்கள் ஆட திணறுகின்றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. 

குறிப்பாக தவான், ரெய்னா ஆகியோர் ஷாட் பிட்ச் பந்துகளில் அவுட்டாகி விடுகின்றனர். பொதுவாக பெரிய ஸ்கோரை எட்டும் போது, ஷாட்பிட்ச் பந்துகளை அடித்துத் தான் ஆட வேண்டும். 

ரெய்னா களத்தில் இறங்கும் போது ரன்ரேட் 8 ரன் வீதம் தேவைப்படுகிறது. அந்த நேரத்தில் ஷாட் பிட்ச் பந்துகளை விட்டு விட்டால் ஸ்கோரை எட்ட முடியாது. 

நிச்சமயமாக இந்திய வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் ஷாட் பிட்ச் பந்துகளை எளிதாக எதிர்கொள்வார்கள். இதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. 

ஹாமில்டன் போட்டியில் இந்திய அணி தோல்விக்கு பௌலர்களே காரணம் என்று தோனி குறிப்பிட்டது பௌலர்களை குறை சொன்னதாக நான் கருத மாட்டேன். பௌலர்களின்செயல்பாடு வருத்தம் அளிப்பதாகஇருக்கிறது என்றே அவர்கருதி இருக்க வேண்டும்.

இந்திய இளம் பந்து வீச்சாளர்களுக்கு போதிய அனுபவம் இல்லை. பயிற்சியாளர்பிளட்சர் ,தோனி ஆகியோர் சிறந்த பந்து வீச்சாளர்களை தேர்வு செய்ய வேண்டும். இது அவர்களுக்கு சவாலான காரியம் தான்.  

ஜாஹிர்கான் அணியில் இடம் பெற்றால் பலமாகத்தான் இருக்கும். அதே சமயம் இவர் அனைத்து வகை போட்டிகளிலும் ஆடுவதற்கு உடல் தகுதி  பெற வேண்டும். உலகக் கோப்பை நெருங்கி வரும் நேரத்தில் மற்ற வேகப் பந்து வீச்சாளர்கள் சோபிக்காத போது ஜாஹிர்கான் நிச்சயமாக தேவைப்படும் வீரராக இருப்பார். 

2013 _ம் ஆண்டு இந்திய அணி பல வெற்றிகளை குவித்தது. வெளிநாடுகளில் தொடர்ந்து இந்தியா தோல்வி அடைந்த போதிலும் சராசரியாக 260_ 270 ரன் எடுத்து வருகிறார்கள். 

பௌலிங் தான் சற்று மோசமாக உள்ளது. இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் மீண்டும் பார்முக்குவந்தால் நிச்சயமாக இந்தியா வெளிநாடுகளில் வெற்றி பெறும். 

தென் ஆப்பிரிக்கா தொடரின் போது இந்திய அணி, டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாகவே ஆடினர். இதே போன்று நியூசிலாந்திலும் சிறப்பாக ஆடுவார்கள்

என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இவ்வாறு டிராவிட் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ