அமெரிக்காவில் நடந்தே சென்று ஆபரேஷன் செய்து சாதனை

Image Unavailable

 

நியூயார்க்,பிப்.1 அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் மோட்டார் வாகனங்கள் செல்ல முடியாததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை ஒரு டாக்டர் பொருட்படுத்தாமல் 10 கிலோ மீட்டர் தூரம் சென்று நோயாளிக்கு மூளை ஆபரேசன் செய்து தனது கடமையை செய்தார். எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது. இதனால் நியூயார்க், ஹூஸ்டன், பிர்மிங்காம் உள்ளிட்ட பல பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மோட்டார் வாகனங்கள் செல்லமுடியவில்லை. மக்களின் அன்றாட வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையி்ல் பிரிம்ஹாமில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஒரு நோயாளிக்கு மூளை ஆபரேஷன் செய்ய வேண்டியிருந்தது. அதற்காக அந்த மருத்துமனையில் பணிபுரியும் டாக்டர் ஷென்கோவுக்கு அழைப்புவிடப்பட்டது. கார் செல்ல முடியாததால் கடமை தவறாமல் அவர் நடந்தே சென்று அந்த நோயாளிக்கு ஆபரேஷன் செய்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ