ஜெயலலிதாவின் பிறந்த நாள் - அ.தி.மு.க. தலைமை நிலையத்தில் கொண்டாட்டம்

வெள்ளிக்கிழமை, 25 பெப்ரவரி 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, பிப்.25 - அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 63-வது பிறந்த நாள் விழா நேற்று தமிழகம் முழுவதும் சிறப்பாக எழுச்சியாக ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி  கொண்டாடப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை நிலையத்தில் பிறந்த நாள் விழாவுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. ஜெயலலிதாவின் பிறந்த நாளை குறிக்கும் வகையில் 63 கிலோ எடை கொண்ட பிரமாண்டமான கேக் தயாரிக்கப்பட்டது. கேக்கை அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் வெட்டினார். அப்போது ஜெயலலிதா வாழ்க என தொண்டர்கள் கோஷமிட்டனர். முன்னதாக பிறந்த நாள் மலரை மதுசூதனன் வெளியிட, தர்மபுரி மாவட்ட செயலாளர் முனுசாமி பெற்றுக் கொண்டார். தலைமை நிலையத்தில் குவிந்திருந்த தொண்டர்களுக்கு பிறந்த நாள் கேக் பரிமாறப்பட்டது. இனிப்புகள் வழங்கப்பட்டன. பட்டாசுகள் வெடித்து பிறந்த நாளை தொண்டர்கள் கொண்டாடினார்கள். 

பிறந்த நாள் விழாவில் தலைமை நிலைய நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், மாவட்ட செயலாளர்கள் டி.ஜெயக்குமார், செந்தமிழன், மூர்த்தி, எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், கலைராஜன் மற்றும் பா.வளர்மதி, நயினார் நாகேந்திரன், கருப்பசாமி, தளவாய்சுந்தரம், ஆதிராஜாராம், மனோஜ்பாண்டியன், கோகுலஇந்திரா, நடிகர் சரவணன், பல்லடம் கே.எஸ்.துரைமுருகன், தென்சென்னை மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் வீரை கறீம், இஸ்மாயில்கனி, ஆர்.இளங்கோவன், திருவொற்றியூர் ராஜேந்திரன், ரசாக், தி.நகர், சி.பி.அசோக், சோழிங்நல்லூர் சிறுபான்மை பிரிவு தலைவர் சர்புதீன், செயலாளர் குத்புதீன், உத்தண்டி சங்கர், வி.முருகன், ராஜேஷ்கண்ணா, சிந்தாதிரிப்பேட்டை பாண்டியன், எஸ்.எஸ்.எஸ்.ராமு, மனோகரன் வாணஅடையார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி மகளிர் அணி செயலாளர் கோகுல இந்திரா, அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் பா.வளர்மதி ஆகியோர் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்கள். ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி சென்னை வடபழனி முருகன் கோயிலில் மகளிர் அணி செயலாளர் கோகலஇந்திரா தங்கத் தேர் இழுத்தார். 

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் தமிழகம் மட்டுமின்றி புதுவை, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் அந்தமான் நிக்கோபர் தீவுகளிலும் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: