எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருமங்கலம், மே. - 29 - திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரில் வயிற்றுப் போக்கு நோயினா ல் பாதிக்கப்பட்ட மகக்களை நேரில் சந்தித்து முத்துராமலிங்கம் எம். எல்.ஏ. ஆறுதல் கூறினார். அவர்களுக்கு சிறப்பான சிகிட்சை அளிக்கு மாறு மருத்துவக் குழுவினரை அவர் கேட்டுக் கொண்டார். திருமங்கலம் அருகே உள்ளது கப்பலூர் கிராமம். இங்கு 4 ஆயிரத்திற் கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு கழிவு நீர் கலந்து வந்த குடிநீரை பருகியதாலும், செயற்கையா ன முறையில் கார்பைடு கற்களை வைத்து பழுக்க வைக்கப்பட்ட மா ம்பழங்களை தின்றதாலும், 30 -க்கும் மேற்பட்டோருக்கு திடீரென்று வயிற்றுப் போக்கு ஏற்பட்டது.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு திருமங்கலம், ஆஸ்டின்பட்டி அரசு மருத்துவமனைகளில் சிகிட்சை அளிக்கப்பட்டது. மேலும், சிறப் பான சிகிட்சை அளிப்பதற்காக மாவட்ட சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் சண்முக சுந்தரம் மேற்பார்வையில் செக்கானூரணி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் இந்திரா காந்தி, சரவணன், பிர பா, சாகுல், ஆனந்தி மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள், செவி லியர்கள், பணியாளர்களை கொண்ட மருத்துவ குழுவினர் கப்பலூரி ல் முகாமிட்டு 24 மணி நேரமும் பொதுமக்களுக்கு சிகிட்சை அளித்தனர்.
இதனிடையே கண்ணம்மாள் என்ற மூதாட்டி சிறுநீரக கோளாறு கார ணமாகவும், முனியம்மாள் என்ற மூதாட்டி வயது மூப்பு காரணமாக வும், மரணமடைந்தனர். இதே போல பாப்பு (80) என்ற மூதாட்டியும் இயற்கை எய்தினார்.
காரணங்கள் இப்படி இருக்க மூதாட்டிகள் அனைவரும் வயிற்றுப் போக்கால் மரணமடைந்து விட்டனர் என தக வல்களை பரப்பிய சிலர் பொது மக்களை பீதி அடையச் செய்தனர்.
இந்நிலையில், கப்பலூரில் ஏற்பட்டுள்ள வயிற்றுப் போக்கு நோய் குறித்தும், அதனால் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள பயம் குறித் தும் தகவலறிந்த திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் ம. முத்துராமலி ங்கம் கட்சி நிர்வாகிகளுடன் கப்பலூர் கிராமத்திற்கு வருகை புரிந் தார்.
அப்போது, கப்பலூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் 24 மணி நேரமு ம், இயங்கி வரும் மருத்துவ முகாமை பார்வையிட்டு அங்கு பணியில் இருந்த மருத்துவ குழுவினரிடம் வயிற்றுப் போக்கு நோய் குறித்த விபரங்களை கேட்டறிந்தார்.
பின்னர் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு மருத்துவ குழுவினரால் வழங்கப்படும் சிகிட்சைகளை நேரில் பார் வையிட்டார். இதைத் தொடர்ந்து வயிற்றுப் போக்கு நோய் பரவிய சமயத்தில், இறந்த மூதாட்டிகள் கண்ணம்மாள், முனியம்மாள், பாப் பு ஆகியோரது இல்லங்களுக்கு நேரில் சென்ற முத்துராமலிங்கம் எம். எல்.ஏ. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
பிறகு, அரசுத் துறை அலுவலர்கள் உதவியுடன் கப்பலூரின் அனைத்து பகுதிகளையும் சுற்றிப் பார்த்த எம்.எல்.ஏ. சுகாதார வசதிகளை மேம் படுத்திடுமாறும், பொதுமக்களுக்கு நல்ல குடிதண்ணீர் வசதி செய்திடு மாறும் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
அப்போது, மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச் செல்வம், நகரச் செயலாளர் ஜே.டி. விஜயன், ஒன்றியச் செயலாளர் பாண்டி, கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், பஞ்சாயத்து முன்னாள் தலைவர்கள் மூர்த் தி, விருமாண்டி, கப்பலூர் ஆறுமுகம், மணிகண்டன், ரமேஷ், பூமி போஸ் மற்றும் ஏராளமானோர் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |