ராசாவின் சகோதரரிடம் சி.பி.ஐ. மீண்டும் விசாரணை

Rajasbrother1 0

புது டெல்லி,பிப்.25 - முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சரான ஆ. ராசாவின் சகோதரர் கலியபெருமாளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது 2 ஜி அலைவரிசை ஒதுக்கீடு ஊழல் குறித்தும் பெருமாள் இப்போது செய்து வரும் தொழில், அவர் நடத்தி வரும் நிறுவனம் மற்றும் ராசா வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் ஆகியவை குறித்தும் சி.பி.ஐ. விசாரணை நடத்தினர். பெருமாள் நடத்தி வரும் நிறுவனம் ராசாவின் பினாமி சொத்தாக இருக்குமோ என்ற அடிப்படையிலும் கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டன. மேலும் சில நாட்கள் அவரிடம் விசாரணை நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.
பெருமாளிடம் ஏற்கனவே அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ள நிலையில் டெல்லியில் உள்ள அமலாக்கப் பிரிவு இயக்குனரகத்தில் 3 மணி நேரம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ