எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, மார்ச்.11 - நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில், முதல் குற்றப்பத்திரிகையை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ தரப்பு தாக்கல் செய்தது.
1993ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை நடைபெற்ற நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விசாரணையில், நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கு தொடர்பாக தனியார் நிறுவனங்கள், அதன் இயக்குநர்கள் மற்றும் பல அரசு ஊழியர்கள் மீது 16 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்நிலையில், இவ்வழக்கில் முதல் குற்றப்பத்திரிகையை ஹைதராபாத்தைச் சேர்ந்த என்.பி.பி.எல். நிறுவனத்துக்கு எதிராக சி.பி.ஐ தாக்கல் செய்துள்ளது.
இந்நிறுவனத்தின் இயக்குநர்கள் சந்திர பிரசாத், திரி விக்ராமா ஆகியோர் மீது சதி வேலையில் ஈடுபட்டது, மோசடி செய்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
என்.பி.பி.எல். நிறுவனத்துக்கு 2250 மெ.வா. உற்பத்தி திறன் கொண்ட அணல் மின் நிலையம் அமைக்க உரிமம் வழங்கப்பட்டது. ஆனால், இந்த உரிமத்தை என்.பி.பி.எல். நிறுவனம், ரூ.200 கோடி லாபத்திற்கு எஸ்ஸார் நிறுவனத்துக்கு விற்பனை செய்தது என்பது குற்றச்சாட்டாகும்.
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் ஏதோ தவறு நிகழ்ந்திருக்கிறது என்று உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு ஒப்புகொண்டது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


