கங்கைநதியை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள் பிரதமருக்கு உமாபாரதி கோரிக்கை

Image Unavailable

ஹரித்துவார்,மே.- 30 - புனிதமான கங்கை நதியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மன்மோகன்சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, உ.பி. முதல்வர் மாயாவதி ஆகியோரை மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் உமாபாரதி வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து ஹரித்துவாரில் அவர் கூறியதாவது,
கங்கை நதி பிரச்சினை ஒரு அரசியல் பிரச்சினை அல்ல. இது நம்பிக்கையோடு சம்பந்தப்பட்ட விவகாரம். எனவே இந்த நதியை பாதுகாப்பதற்கு உதவும் வகையில் என்னென்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அத்தனை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று பிரதமரையும், சோனியா, அத்வானி, மாயாவதி ஆகியோரையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.
புனிதமான இந்த நதியை காக்கும் விஷயத்தில் நாட்டின் உயர் மட்ட தலைவர்கள் ஒன்று சேர வேண்டும். இந்த நதியை பாதுகாக்க உண்மையான முயற்சிகளை எடுக்க வேண்டியது ஒவ்வொரு தலைவர்களின் கடமை. இவ்வாறு உமா பாரதி நிருபர்களிடம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கடந்த சில நாட்களாகவே உண்ணாவிரதம் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ